மட்டக்களப்பில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் சிங்கள மக்கள் ஆர்பாட்டம்


(சரவணன்)

மட்டக்களப்பு வாழைச்சேனை முறாவோடை பாடசாலை மைதான எதிர்த்தும் மட்டக்களப்பில் இடம்பெறும் காணி அபகரிப்பினை நிறுத்தி நடவடிக்கை யெடுக்குமாறு கோரி மட்டக்களப்பில் விசேட மத நல்லிணக்க வழிபாடும் கவன ஈர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு கொழும்பு வீதியில் உள்ள பின்ளையாரடி ஆலயத்திற்கு முன்னாள் இன்று செவ்வாய்க்கிழமை  இடம்பெற்றது.

மட்டக்களப்பு சிங்கள தமிழ் இனத்தின் விழிப்புணர்வுக்கான அமைப்பின் தலைவர்   மங்கலராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தலைமையில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றிணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை ஏற்பாடு செய்தனர்.

இந்த போராட்டத்தின் போது பிள்ளையாரடி ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன், பௌத்த வழிபாடுகளும் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து மாணவருக்கச் சொந்தமான மைதானத்தை மீட்டுத்தாருங்கள், தமிழ் அரசியல் தலைமைகளே உங்களுக்கு சிறப்புச் சலுகைகளுக்காகவும் சொகுசு வாகனங்களை பெறுவதற்காகவும் காட்டும் அக்கறையில் ஒரு வீதம் ஏனும் தமிழர்களின் நிலத்தை பாதுகாப்பதற்கு காட்டுகின்றீர்களில்லையே,
பிரதேச செயலாளரே நீங்கள் அநீதியின்பக்கம் சோரம் போகாது எமக்கு தீர்வு பெற்றத்தருவீர்கள் என நம்புகின்றோம், கிழக்கு தமிழ்மக்களின் காணியை அபகரிக்காதீர்கள், மட்டக்களப்பு தமிழ் மக்களின் காணியை அபகரிக்காதே , இரப்பதையும் இழப்பதுதான் நல்லாட்சி தந்த பரிசா என பதைகள் ஏந்தியவாறு பாடசாலை மாணவர்கள் மற்றம் தமிழ் சிங்கள மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் ஒன்றினைந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர் .