மட்டக்களப்பு முறாவோடை ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் மீது பொலிசார் தடியடி

-க-சரவணன்;--
மட்டக்களப்பு வாழைச்சேனை  முறாவோடை பாடசாலை மைதானத்தை அத்துமீறி அபகரித்து குடிசை அமைத்துள்ளததை அகற்ற மட்டக்களப்பு சிங்கள தமிழ் இனத்தின் விழிப்புணர்வுக்கான அமைப்பின் தலைவர்;; மங்களராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தலைமையிலான தமிழ் சிங்கள பொதுமக்கள் அதனை இன்று செவ்வாய்க்கிழமை மைதானத்தை முற்றுகையிட்டதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது


மட்டக்களப்பு பிள்ளையாரடி ஆலயத்தில் மத நல்லிணக்கத்திற்காக விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் அங்கு மட்டக்களப்பில் இடம்பெறும் காணி அபகரிப்பிற்கும் முறாவோடை பாடசாலை மைதான அபகரிப்பிற்கும் எதிராக ஆர்பாட்டததில் ஈடுபட்டனர்
இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டகாரர்கள் குறித்த பாடசாலைக்கு சென்ற அங்க அமைக்கப்பட் வேலிகளை களற்றமுற்பட்டனர் இதனையடுத்த கலகம் அடக்கம் பொலிசாருக்கம் ஆர்பாட்டகாரர்களுக்கம் இடையே பெரும் வாக்குவாதம் இடம்பெற்றதுடன் ஆர்பாட்காரர்கள் அதனையம் மீறி வேலியை களற்ற முற்பட்னர்


இதனையடுத்த பொலிசார் அவர்கள் மீது தடியடிபிரயோகம் செய்தனர் இதில் பெண்கள் உட்பட 4 பேர்காயடைந்தனர் இதேவேளை பொலிசார் மீது  ஆர்பாட்டகாரர்கள் கல்விச்சு நடாத்தியதையடுத்த பொலிசார் புகைக்குண்டுகள் வீசி ஆர்பாட்டகாரர்களை கலைத்தனர் இதனையடுத்து அங்கு சில  மணிநேரம் பெரும் பதற்றம் ஏற்பட்டது

இதனையடுத்த அங்க மேலதிகமாக கலகம் அடக்கம் பொலிசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபட்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர், கிழக்கமாகாண காணி ஆணையாளர் வருகை தந்து ஆர்பாட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இந்த காணி பாடசாலைக்குரியது எனவும் இது தொடர்பாக நாளை புதன்கிழமை காலை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் அரசாங்க அதிபர் .பொலிசார் காணி ஆணையாளர். பிரதேச செயலாளர், மற்றம் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கொண்ட விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதுடன் அதில் தீர்வை பெற்றத் தருவதாகவும் பாடசாலை மைதானத்திற்கு வரைபடத்தில் உள்ள காணியில் ஒரு அங்குலம் கூடவிடாது அனை பெற்றுதருவதாக உறதியளித்ததையடுத்து ஆர்பாட்டகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்