மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கம் நடத்தும் தரம் 05 மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரிப்பதற்க்கான செயற்றிட்டம் 2018


(சசி)
தரம் 05 மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரிக்கும் பொருட்டு மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்கமானது வார இறுதி நாட்களில் கற்பித்தல் வகுப்புக்களையும், மாதந்தோறும் மாதிரிப் பரீட்சைகளையும் நடத்தி வருகின்றது. 2018 ஆம் ஆண்டு பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான செயற்திட்டமானது 30.09.2017 தொடக்கம் 15.08.2018 வரை நடைபெற இருக்கின்றது. தற்பேர்து 200 மேற்பட்ட மாணவர்கள் வரை பயன்பெறும் இத் திட்டத்தில் விருப்பமான தமிழ் மாணவர்கள் இணைந்து கொள்ள முடியும்.

முற்று முழுதாக இலவசமாக நடத்தப்படும் செயற்திட்டத்திற்கு நிதி உதவியினை தேத்தாத்தீவைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் இராசரெத்தினம் (மகேந்திரன்), ரூபவ் பாக்கியராஜா கமலநாதன் (கண்ணன்) ஆகியோர் வழங்கியுள்ளனர். இந் நிகழ்ச்சித்திட்டம், வகுப்புக்கள் தொடர்பான விளக்கம் மற்றும் சமூக விளிப்புணர்வு தொடர்பாக அறிவுறுத்தும் பெற்றார் கூட்டம் மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்க சிவநேசராசா மண்டபத்தில் 10.09.2017 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் மு. ரமேஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சமூகத்திற்கு ஆக்கபூர்வமான கருத்துக்களைக் கூறினார். இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான தகுதிகாண் பரீட்சை நடத்தப்பட்டது.