மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு இனப்படுகொலை 27ஆம் ஆண்டு நினைவேந்தல்


(சசி)
மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு கிராமத்தில் 1990.09.21 ஆம் திகதி திட்டமிட்டு நடாத்தப்பட்ட இனப்படுகொலையில் ஆண்கள், பெண்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். இது இன்று வரை புதுக்குடியிருப்பு கிராம மக்களுக்கு மாறாத வடுவாக இருந்து வரும் வேளையில் அந்த ஆத்மாக்களுக்கான அஞ்சலி நிகழ்வானது இன்று மாலை 4.00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

இந் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன், கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நடராசா ஆகியோர் கலந்து கொண்டதுடன் புதுக்குடியிருப்பு புதுவை நிறுவகத் தலைவர் சதாசிவம், ஆலய பரிபாலன சபைத் தலைவர் குலேந்திரராஜா, மட்/ புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய அதிபர் தட்சணாமூர்த்தி, கதிரவன் நிறுவகத் தலைவர் இன்பராசா ஆகியோரும் கலந்துகொண்டு பொதுமக்களுடன் அஞ்சலி செலுத்தினர். இந் நிகழ்வினை அகம் நிறுவனத்துடன் இணைந்து ஆசிரியர் வரதராஜன் அவர்கள் ஒழுங்கு செய்திருந்தார்.