களுவாஞ்சிக்குடியில் விபத்து

களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை 10.45 மணியளவில் இடம் பெற்ற வீதி விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கிப் பயணித்த கார் ஒன்றும் சிறிய ரக டிப்பர் ஒன்றும் மோதிக்கொண்டதில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. 

இதில் பயணம் செய்தவர்கள் பாரியகாயங்களுக்குள்ளாகவில்லை. சிறிய ரக வானத்தில் பயணித்த ஒருவர் சிறிய காயங்களுக்குள்ளானர். வாகனங்கள் சேதமடைந்துள்ளது. மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்