வின்சென்ற தேசிய பெண்கள் பாடசாலை கல்வி பணிகளைசிறப்பாக முன்னெடுத்து வருகின்றனர்- கிழக்கு மாகாண ஆளுநர்

 (வரதன்)
கிழக்கு மாகாணக் கல்வி அபிவிருத்தியில் ஜனாதிபதி கல்வியமைச்சர் மிகுந்த அக்கறையுடன் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர் இங்கு மூவின மக்களும் இன நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்கும் ஒரு மாகாணமாகும் இங்குள்ள மாணவர்களின்கற்றல் செயற்பாடுகளில் நல்லாட்சி அரசாங்கத்தில் மாகாண மத்திய கல்வியமைச்சுக்கள் வினைத்திறனுடன் செயற்பட்டு வருகின்றது என மட்டக்களப்பு வின்சென்ற தேசிய பெண்கள் பாடசாலையின் வருடார்ந்த பரிசளிப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகல்லாஹம இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் திருமதி ராஜகுமாரி கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இவ்நிகழ்வில் சிறப்பதிதிகளாக மாகாணக் கல்வியமைச்சர் எஸ் தண்டாயுதபாணி மாகாண விவசாய அமைச்சர் K.துரைராஜசிங்கம் மாகாண கல்விப் பணிப்பாளர்  வலயக்கல்விப் பணிப்பாளர் ம.பாஸ்கரன் மற்றும் மதத் தலைவர்கள்  மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள்  கலந்து கொண்ட இவ் நிகழ்வில் கலை கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன்


கடந்த வருடம் கல்வி விளையாட்டு இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சிறப்புத் திறமை காட்டிய மாணவர்கள் அதிதிகளால் பரிசில்கள் வழங்கி கௌரவிக் ;கப்பட்டனர்.இதேவேளை பாடசாலையின்  கல்வி சமூகத்தினால் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மாகாண ஆளுநர் அவரது மனைவி (திருமதி தீப்தி போகல்லாகம)இங்கு பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.