குச்சவெளி அருள்மிகு ஸ்ரீ செம்பீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற புரட்டாதி மாத பௌர்ணமி தின பூசை நிகழ்வுகள்

கிழக்கிலங்கையின் தெட்சண கைலாயம் என திருமூலரால் வர்ணிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளிப்பிரதேசத்தின் அடர்ந்த காட்டுப்பகுதியில உள்ள செம்பிமலை உச்சியின்மீது இந்தியாவின் காஸ்மீர தேசத்தில் இருந்து வருகைதந்த குருமூர்த்தியாம் வணக்கத்திற்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி சுவாமிஜீ அவர்களால் 1938ம் ஆண்டு இலங்கை விஜயத்தின்போது முதன்முறையாக ஸ்தாபிக்கப்பட்டு மூர்த்தி, தலம், தீர்த்தம், தலவிருட்சம் எனும் தனிச்சிறப்போடு அமையப்பெற்ற பழம்பெரும் ஆலயமான அருள்மிகு ஸ்ரீ செம்பீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாதி மாத பௌர்ணமி தின பூசை கடந்த 05.09.2017ம் திகதி செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பானமுறையில் நடைபெற்றது.

இம்மாத பௌர்ணமிதின பூசையினை வணக்கத்திற்குரிய சுவாமிஜீ ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி சுவாமியவர்களால் முதன்முதலாக அமைக்கப்பட்ட ஸ்ரீ செம்பீஸ்வரர் ஆலயத்தின் இருகண்களில் ஒன்றாக விளங்கும் செட்டிபாளையம் ஸ்ரீ சோமகலாநாயகி சமேத சோமநாதலிங்கேஸ்வரர் ஆலய பரிபாலன சபையினர் உபயமாக செய்திருந்தனர்.

 நிகழ்வில் ஆலய விசேடபூசையினையும், அபிசேக ஆராதனைகளையும், ஆசியுரையினையும் இவ் ஆலயங்களின் பிரதம குரு சிவஸ்ரீ.ஏ.ஜனார்த்தனன் சர்மா அவர்கள் நிகழ்த்திவைத்தார்.