மட்டக்களப்பு மாநகரசபையின் தொழிலாளி தாக்கப்பட்டதைக் கண்டித்து மாநகரசபை ஊழியர்களினால் ஆர்ப்பாட்டப் பேரணி

 (வரதன்)
மட்டக்களப்பு மாநகரசபையின் சுத்திகரிப்புத் தொழிலாளி தாக்கப்பட்டதைக் கண்டித்தும் தாக்கியவரைக் கைது செய்து நீதியின் முன் நிறுத்துமாறு கோரியும் மாநகரசபை ஊழியர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி இன்று மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது
.
 கடந்த புதன்கிழமை (20) உயர் நீதி மன்றினால் குறித்த தடை தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று வியாழக்கிழமை (21) மாநகரசபையினால் சேகரிக்கப்பட்ட கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்கு சென்ற போது குறித்த பிரதேச மக்கள் நீதிமன்ற உத்தரவை மீறி கழிவுகளைக் கொட்டவிடாது தடுத்ததோடு தொழிலாளி ஒருவருக்குத்  தாக்குதலும் நடாத்தினர்.

சுத்திகரிப்புத் தொழிலாளியான ஜெயக்குமார் தலையில் காயமேற்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த தொழிலாளி ஜெயகுமாரை   தாக்கியவரைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரியே மாநகரசபையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆரம்பமான பேரணி மட்டக்களப்பு பொலிஸ் நிலையம்  வரை சென்று மீண்டும் காந்திப் பூங்காவை வந்தடைந்து கண்டன வாசகங்கள அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷமெழுப்பினர். இதனால் மாநகர சபையின் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன. தொழிலாளியை தாக்கியவரை  கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரிய மகஜர் மாநகரசபையின் பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன் உள்ளிட்ட 4 பேர் அடங்கிய குழுவினர் மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் யாக்கொட ஆராய்ச்சியிடம் கையளித்ததும் கலைந்து சென்றனர்.