பிள்ளையானின் வேட்கை புத்தக வெளியீட்டு நிகழ்வு

(வரதன்)
சிறைப்பயணக்குறிப்புகள் எனும் பிள்ளையானின் வேட்கை புத்தக வெளியீட்டு நிகழ்வு இன்று  மாலை மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது

கடந்த இரண்டு வருடங்களாக ஒரு அரசியல்க் கைதியாக தடுப்புக் காவலில் இருக்கும் சிவ. சுந்திரகாந்தன் கிழக்கு மாகாண எதிர்கால சந்ததியினருக்காக தனது நேரத்தை செவ்வனே பயன்படுத்தி மட்டக்களப்புச் சிறைச்சாலையிலிருந்து கிழக்கு மாகாணசபை அமர்வுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்ற வேளைகளில் அவர் மனக் கண்முன்னே தோன்றிய வரலாற்றின் பக்கங்களை எடுத்துக்கூறும் வரலாற்று ஏடாக ஆவணப்படுத்திய வேட்கை மலர் வெளியீட்டு விழா  TMVP கட்சியின் பிரதித் தலைவர் யோகவேள் தலைமையில் இடம்பெற்றது.

இவ் நூலில் ஒரு நாள் விடுதலை கண்முன் விரிந்த கடலோரப் பார்வை எல்லைப்புறக் கிராமங்களே எமது கண்கள் பதினாறு வயதினிலே பனிச்சங்கேணி வன்னிக் களத்தில் மார்பில் பாய்ந்த குண்டு  மயிரிழையில் வெருகலில் உயிர் தப்பினேன்.நல்லாட்சியில் கிழக்குத் தமிழர்கள் முளைக்கும் சாராயக் கடைகள் கறுத்தப் பாலமும் கட்டுப்பாட்டுப்பகுதியும எங்களை ஏமாற்றிய இலங்கை அரசு காத்தான்குடியும் ஏறாவூரும் கற்றுத் தந்த பாடங்கள் என ஒரு குழந்தைப் போராளியாக ஆரம்பித்த அவரது போராட்ட வாழ்வு அரசியல் கட்சியின தலைவராக மாகாண முதல் முதலமைச்சராக மாகாண சபை உறுப்பினராக ஒரு சிறைக் கைதியாக என பல பரிமாணங்களைக் கடந்து அவரது வாழ்வில் கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களுக்காக அவர் மேற்கொண்ட சமூகப் பணிகளை எடுத்துக் காட்டும் ஒரு ஊடக எழுத்தாளனாக இவ் நூல் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை

அவரது ஆட்சியில் படுவான்கரையின் கல்வி வளர்ச்சிக்காக தனிக் கல்வி வலயம் உருவாக்கப்பட்டமை.
மட்டக்களப்பின் அடையாளமாக புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டமை
திருமலை மட்டக்களப்புக்கான வெருகல் பாதையினூடாக குறுகிய போக்குவரத்து பாதை அமைக்கப்பட்டமை
பின்தங்கிய பிரதேச பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகள்
கிழக்கு மாகாணத்தில் பாரிய வீதி அபிவிருத்திப் பணிகள் என கிழக்கு மாகாணத்தில் இன்னும் பல பாரிய அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டமை இவ்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவ் நிகழ்விற்கு TMVP கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் கல்வி மான்கள் இலக்கியவாதிகள் நூலாசிரியரின் பெற்றோர் மதத் தலைவர்கள பொதுமக்கள் எனப் பலரும் போராளி ஒருவர் சிறையிலிருந்து எழுதிய கன்னி நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.