சர்வதேச கரையோர துய்மைப்படுத்தல் தினத்தினை முன்னிட்டு திருக்கோவில் கடற்கரை பிரதேசத்தில் இருந்து பெரும் தொகை பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டது.

(எஸ்.கார்த்திகேசு)

சர்வதேச கரையோர துய்மைப்படுத்தல் வாரத்தினை முன்னிட்டு திருக்கோவில் பிரதேசத்தில் சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் ஏற்பாட்டில் இன்று (22) வெள்ளிக்கிழமை பழைய தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனத்தின வளாகத்தில் இருந்து ஆரம்பமானது.

இந்நிகழ்வானது சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர் கே.சிவகுமார் தலைமையில் ஆரம்பமானதுடன் பிரமத அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் அவர்களும் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகரூபன் மற்றும் திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எஸ்.கே.பண்டார  ஆகியோரும் கலந்து கொண்டு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் பாவனைகளினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பான வழிப்புணர்வு கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.


சர்வதேச கரையோர துய்மைப்படுத்தல் நிகழ்வானது மாணவர்கள், படையினர், பொலிஸ் பிரிவு, பொதுமக்கள், பிரதேசசபை மற்றும் ஏனைய அரச திணைக்கள உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் திருக்கோவில் கடற்கரை பிரதேச இரண்டு கிலோமீற்றர் தூரம் சுத்தப்படுத்தப்பட்டதோடு பெருமளவான பிளாஸ்டிக்  போத்தல்களும்,பொலித்தின் பைகளும் அகற்றப்பட்டது.

இவ் சர்வதேச கரையோர துய்மைப்படுத்தல் தினமானது ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமையில் அனுஷ்டிக்கப்பட்டு வருவதுடன் இந்நிகழ்வானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக தேசிய கரையோர கடல் வளங்களை பாதுகாக்கும் வாரம் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் 22ஆம் திகதிவரை இலங்கையின் கரையோர பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.