ரேசிங்கார் போன்று பாடசாலைகளும்,அதனைச் செலுத்தும் சாரதிகளாக அதிபர்கள் திகழவேண்டும்.

(க.விஜயரெத்தினம்)

றேசிங் கார்கள்தான் தன்மானத்தை பாதுகாக்கும் பாடசாலைகள்.றேசிங் காரைச் செலுத்தும் சாரதிகள்தான் நன்மதிப்பையும், மரியாதையைப்பெறும் அதிபர்கள் தான் பாடசாலைக்கு  இன்று தேவைப்படுகின்றார்கள் என கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஷாம் தெரிவித்தார். மட்டக்களப்பு வின்சன்ட் உயர் தேசிய பாடசாலையின் பரிசளிப்பு விழாவில் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். இந்நிகழ்வு அதிபர் திருமதி இராஜகுமாரி கனகசிங்கம் தலைமையில் செவ்வாய்க்கிழமை (19.9.2017) நடைபெற்றது.

அவர் தொடர்ந்து பேசுகையில்:- வின்சன்ட உயர்தர பெண்கள் பாடசாலையின் பரிசளிப்பானது எனக்கு ஆச்சரியத்தையும், உயர்ந்த சிந்தனையையும் தருகின்றது.ஏன்னென்றால் இந்த பரிசளிப்பு விழாவனது பாடசாலையின் பரிசளிப்பு விழா என்று நான் கருதவில்லை. இது ஒரு பல்கலைக்கழகத்தின் பரிசளிப்பு விழா போன்று ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

சாதனையாளர்களை பாராட்டுவதிலும்,அதனை சிறப்பான முறையிலும் ஒழுங்கமைத்தலிலும் பாரியதொரு திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதை நான் உற்றுநோக்கி அவதானித்துள்ளேன். இந்தப் பரிசளிப்பு விழாவானது பட்டியல் நீண்டு போகின்றது. சாதாரணமாக பாடசாலையில் பரிசளிப்பு விழாவில் பங்குபற்றுவோர் குறைவாகத்தான் காணக்கூடியதாகவுள்ளது.ஆனால் இப்பாடசாலையின் பரிசளிப்பு விழாவில் பாராட்டுவோர் பட்டியல் நீ ண்டதாக காணப்படுகின்றது.

அதேபோன்று இப்பாடசாலையின் பிள்ளைகளின் பெற்றோர்கள், அதிபர் தலைமையிலான பாடசாலை நிருவாகம், பாடசாலையின் அபிவிருத்தி சங்கத்தினர்,பழைய மாணவிகள் சங்கம், போன்றோர்களின் முகாமைத்துவ ஒருங்கிணைப்பு, செயல்திறன் மிகவும் மெச்சத்தக்கதாகும். இதனை பாராட்டுகின்றேன். மனதார வாழ்த்துகின்றேன். அதேபோல் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் மாணவர்களின் பெறுபேறுகள், அவர்கள் பரிசு பெறும் விதம், பரிசுகளை நேர்த்தியாக வழங்கும் முறை, பதட்டம் சிக்கலில்லாமல் பெறும்முறை,மாணவர்கள் புகைப்படத்துக்குகான தயாராகும் நுட்பம் எல்லாம் பார்ப்போரை வியப்பூட்டுகின்றது. இதுதான் பாடசாலை அதிபருக்கு இருக்கும் உயர்ந்த பண்பாகும்.

கிழக்கு மாகாணத்தில் இருக்கும் அதிபர்களை அழைத்து வந்து பாரியதொரு பரிசளிப்பு விழாவை செய்து பரிசு வழங்க வேண்டும். அப்போதுதான் சகல அதிபர்களும் இவ்வாறான பரிசளிப்பு விழாவை ஏற்பாடு செய்வார்கள். அதிபர்கள் மாறலாம். அப்பாடசாலையின் கலாச்சாரம் மாறக்கூடாது. பாடசாலைக்கு வருகின்றவர்களும், போகின்றவர்களும் பாடசாலையின் கலாச்சாரத்தை சிதைக்க கூடாது. இக்கல்லூரியின் கலாச்சாரம் சிதைக்கப்படாமல் இருப்பதால்தான் அகிலஇலங்கை ரீதியில் கலாச்சாரத்தை பாதுகாத்து  முதற்தர பாடசாலையாக வின்சன்ட் பாடசாலை திகழ்வதால்தான்; ஒரே தரத்தில் 99 மில்லியன் ரூபா பணத்தை விஷேடமாக ஒதுக்கி லிப்டுடன் கூடிய நான்கு மாடிக்கட்டிடத்தைகட்டுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

கலாசாரத்தை பாதுகாத்து சிறந்த நிருவாகத்தை நடத்தும் இவ் அதிபர்   மாவட்டத்திலும், மாகாணத்திலும் ஒரு இரும்பு பெண்மணியாக கல்வி சமூகத்தின் மத்தியில்  வலம் வருகின்றார். இவருடைய செயல்திறன், நம்பிக்கை, முகாமைத்துவம், பக்குவம் எல்லாம் வீண்போகவில்லை. இந்த அதிபரை நம்பி பாடசாலையை பொறுப்புளிக்கலாம். துணிச்சலுடன் சாதித்து சாதனையாளர்களை இந்த அதிபர் உருவாக்குவார் என்பதில் ஐயமில்லை. என்னுடைய மதம் சம்மதித்தால் நான் அதிபரை தலைவணங்குவேன். இப்படிப்பட்ட அதிபர்களால்தான் கல்வி வாழ்ந்து கொண்டிருக்கின்றது. அதனால்தான் கல்வி எல்லோர் மத்தியிலும் பேசும்பொருளாக காணப்படுகின்றது. இந்த கல்விச்சமூகம் அரசியல் செல்வாக்கு இல்லாமல் எதிர்காலத்தில் இவ்வாறான, இவரைப்போன்ற தன்மானத்தையுடைய அதிபரைத் தேடவேண்டும். இப்பாடசாலையின் அதிபரின் பங்கு மிகவும் முக்கியமானதாக காணப்பட்டது.

ஒரு பாடசாலையானது சவாலுக்கு மத்தியில் போட்டியில் போட்டு பங்குபற்றி அப்போட்டியில் தரப்படுத்தலில் முதலாம் இடத்தை தட்டிச்செல்லும் ரேசிங்கார் போன்று திகழ வேண்டும். இந்த ரேசிங்கார் போன்றுதார் தன்மானத்தையும், மரியாதையும் பாதுகாக்கும் பாடசாலையாக திகழ வேண்டும். அந்த காரினைச் செலுத்தும் சாரதியானவர் அதிபர் ஆவார். அதாவது பந்தயத்தில் ஜெயிக்கும் போட்டிக்கு தனது தொழிநுட்ப, பொறியியல் வியூகங்கள் அனைத்தையும் பாவித்து காரினைச் செலுத்தும் சாரதியாவார். இவ்வாறான காரினை உருவாக்குவதில் உச்சக்கட்ட தொழிநுட்ப, பொறியியலை சுமார் நூறு கோடி ரூபாவை செலவு செய்து மோட்டார் கம்பனி உருவாக்கும். இந்த ரேசிங்கார் போன்றுதான் பாடசாலைகள் உருவாக்கப்படுகின்றது. இவ்வாறான காரினைச் செலுத்துவதற்கு சாரதிகளை உருவாக்குவதற்கு இருநூறு கோடி ரூபாவை கார்கம்பனி செலவு செய்கின்றது. இவ்வாறான காரினையும், கார் சாரதியாக அதிபர் காரினைச் செலுத்தி போட்டியில் ஜெயிப்பதுதான் அதிபர்களின் செயற்பாடாகவும், தேவையாகவும் இருக்கின்றது. இதனால்தான் போட்டியில் வெற்றிபெற முடியும். அதன் பயனாக சாதனையாளர்கள் உருவாக்கப்படுகின்றது. ஆனால் பயன்தான்கோழி போன்ற சாரதிகளிடம் ரேசிங்காரை ஒப்படைக்க முடியாது. இதனால் வெற்றி பெறமுடியாது. இதுதான் தோல்வியடையும் வென்சி கார்கள். இதனை உணர்ந்து அல்டோ கார்கள் போட்டியில் வெற்றி பெறுவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது எனத் தெரிவித்தார்.