கிரான் பொண்டுகள் சேனையில் சட்டவிராத மணல் அகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கை இடம்பெற்று வரும் நிலையில் இதனை தடுக்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவரயின் பணிப்புரைக்கமைய பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதனடிப்படையில் மட்டக்களப்பு பிராந்திய ஊழல் மோசடி தடுப்பு பிரிவுப் பொறுப்பதிகாரி டப்ளியு.ரணதுங்க தலைமையிலான குழுவினர் நேற்று  (11) காலை கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொண்டுகள்சேனை ஆற்றில் சட்டவிரோதமான முறையில் மண் ஏற்றிக் கொண்டிருந்த இரண்டு உழவு இயந்திரமும், சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்து வாழைச்சேனை பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பொண்டுகள்சேனை, வாகனேரி, ஆத்துச்சேனை போன்ற பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றுவதாக மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவரவுக்கு கிடைத்த தகவலையடுத்து சட்டவிரோத மண் அகழ்வை தடுக்கும் முகமாக விசேடமாக நியமிக்கப்பட்ட குழுவினரால் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டு வருபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.