Wednesday, September 13, 2017

'இராணுவத்தினர் மாத்திரமல்ல வடக்கு, கிழக்கு பொதுமக்களும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் கிழக்கு மாகாண சமூகசேவைத் திணைக்கள பணிப்பாளர் எம்.சி.அன்சார்-

ads

                     (ஜெ.ஜெய்ஷிகன்)
தேசிய பரா ஒலிம்பிக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் கூட்டம் சந்துருக்கொண்டானில் அமைந்துள்ள சர்வோதய மண்டபத்தில் கிழக்கு மாகாண சமூகசேவைத் திணைக்கள பணிப்பாளர் எம்.சி.அன்சார் தலைமையில் நடைபெற்றது.

கடந்த வருடம் 2016 இல் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளூன தேசிய பரா ஒலிம்பிக் போட்டியில் எமது மாற்றுத்திறனாளிகள் 06 தங்கம் 17 வெண்கல மற்றும் வெள்ளிப் பதக்கங்களையும் வெற்றி கொண்கொண்டிருந்தனர். நடைபெறவுள்ள பரா ஒலிம்பிக் போட்டியில் இம்முறை அதிக பதக்கங்களை வென்று சாதனை படைப்பார்கள்.

நடைபெற்றுமுடிந்த யுத்தத்தில் இராணுவத்தினர் மாத்திரமல்ல வடக்கு, கிழக்கு பொதுமக்களும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களை வாழ்வாதாரத்தில் மாத்திரமல்ல தேசிய பரா ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்குபற்ற வேண்டும். அவர்களின் உடல், உளத் திறமைகளை வெளிக் கொணர்வதற்கு பரா ஒலிம்பிக் நல்ல களமாக அமையும் என்றார்.
   இந்  நிகழ்வில் தேசிய பரா ஒலிம்பிக் குழவின் தலைவர் சட்டத்தரணி யூ.ஆர்.ரொற்றிகோ , நிதிமுகாமை மற்றும் இயலுமை தொடர்பில் பணியாற்றி வருகின்ற பிரியந்த பீரிஸ், மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் சா.அருள்மொழி, மத்திய அரசின் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செல்வநாயகம், சிரேஸ்ட்ட சமூகசேவை உத்தியோகத்தர் அலியார், சமூகசேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், விளையாட்டு உத்தியோகத்தர்கள் எனப் பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.




'இராணுவத்தினர் மாத்திரமல்ல வடக்கு, கிழக்கு பொதுமக்களும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் கிழக்கு மாகாண சமூகசேவைத் திணைக்கள பணிப்பாளர் எம்.சி.அன்சார்- Rating: 4.5 Diposkan Oleh: akshithaprinters@gmail.com
 

Top