குழந்தையும் மனவெழுச்சி வாழ்க்கையும்

மாணவரின் மனவெழுச்சி,  மனோபாவம் என்பன பாடசாலை வாழ்ககையில் உடன்பாடாகவோ, எதிர்மறையாகவோ தாக்கம் புரிகின்றன என்பது நிச்சயமானது. இடைக்கிடை தனியாள் வேறுபாடுகள் பற்றிய ஞாபகத்தோடு குழந்தைகளின் வாழ்க்கையில் மனவெழுச்சி அம்சம் சார்பாக ஆசிரியர் கவனமாக இருத்தல் அவசியமாகும். குழந்தையின் மனவெழுச்சிவசமான வாழ்க்கை, இப்பொழுது அவனது அறிவு சம்பந்தமான வாழ்க்கைக்கோ, பௌதீக வாழ்க்கைக்கோ,  மிக முக்கியமானது. துரதிஷ்டவசமாகப் பெற்றோர்களும்,  ஆசிரியர்களும்,  இதை பொறுப்பான பலர் இன்னமும் இந்த உயிர்ப்பான உண்மை பற்றி அறியாமையோடு இருக்கின்றனர். குழந்தையின் மனவெழுச்சிபூர்வமான வாழ்க்கை,  அவனது கல்வியில் குறிப்பான நவீன கல்வியலாளர் குழுக்கள் சிலவற்றால் சரியாக உணரப்பட்டது. அது பற்றிய தகவல் நான்கு முக்கிய மூலங்களில் இருந்து வெளிவந்தது.
முதலாவதாக, அது முன்னேற்றப் பாடசாலைகளிலிருந்து கண்டறியப்பட்டது.
 அவர்கள் குழந்தைகளின் மன எழுச்சி பூர்வமான வாழ்க்கைக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அத்தோடு எந்த வகையான பழைய பாடசாலை முறையிலான கொடிய தண்டனை கொடுப்பதற்கும் எதிராயிருந்தனர். இவ்வகைப் பாடசாலைத் தயாரிப்பான மாணவர் இசைவாக்கம் பெற்றவர்களாக, மகிழ்ச்சிகரமானவர்களாக,  முற்றிலும் வேறாகக் கணிக்கப்படக் கூடியவர்களாக இருந்தனர்.

இரண்டாவதாக, சித்திரம, கைப்பணி, நாடகம், இசை முதலிய மூலம் கற்பிக்கும் பாடசாலைகளிலிருந்து இது கண்டறியபிபட்டது. இம் மாணவர்களுக்கு சுதந்திரமாக மனவெழுச்சிகளை வெளிப்படுத்தும் குழு வாய்ப்பும் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக, அந்த மாணவர்கள் மன எழுச்சி மன இயக்கக் கட்டுப்பாடுகளைச் சமூகச் சமநிலைத் தொடர்புகளோடு பெற்றவர்களாகவிருந்தனர்.

மூன்றாவதாக, மாணவர்களின் தேவைகளுக்கு முதல் முக்கியத்துவம் அளித்து எப்பொழுதும் வழங்கும் பாடசாலைகளிலிருந்து இது கண்டறியப்பட்டது. இங்கு ஆசிரியர்-மாணவர் தொடர்பு, இந்தத் தேவைகளின் அடிப்படையில் விளங்கிக் கொள்ளப்பட்டதாக இருந்தது. பாடசாலையின் எல்லா இடங்களிலும் கஷ்டங்களுக்கும்  செய்திறனுக்கும் நேராக அங்கேயொரு இரக்க சுபாவம் காணப்பட்டது.

நான்காவதாக, பின் தங்கியநிலை, இளைஞர்களுக்குரிய கடமை தவறல்,  இசைவாக்கமின்மை என்பவற்றின் களத்தில் பல்வகையான பெறுமதிமிக்க கண்டுபிடிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. இவ்வாறன கண்டுபிடிப்புக்கள் ஆழமாகவும, சக்தி வாய்ந்த செல்வாக்குடனும் பழக வைத்தது. எதிர்மறையான மனவெழுச்சி நிலைமை தீவிரமாக ஈடுபட வைத்தது. முன்னேற்றகரமான தகவல்கள,  தீர்வுகள் , மறு இசைவாக்கம் என்பவற்றைக் காண முடிந்தது. குழந்தைகள், கட்டிளைஞர்கள் பற்றிய படிப்புக்கள் இது சம்பந்தமான பல்வேறு ஆய்வுகள் என்பன நுண்ணறிவுக்கும், பௌதிக, மனவெழுச்சி அம்சங்களுக்கும் வாழ்க்கைக்குமிடையிலான நெருக்கமான தொடர்புகளைக் காட்டிக் கொடுத்தன.

இன்று நாம் மாணவர்களின் நோய்கள், கல்வி சம்பந்தமான தோல்வி, மகிழ்ச்சியின்மை, கஷ்டமான நடத்தை என்பனவெல்லாம் மனவெழுச்சி ஏமாற்றத்தின் நேரடியான விளைவுகள் என்பதை அறிகிறோம். ஆழமான உளவியல்சார் விளக்கம் இல்லாமல் இவற்றையெல்லாம் ஆசிரியர் அறிய முடியாது என்பதை உணர்கிறோம்.

 உளவியல் ரீதியிலான கண்டறிதலின்படி, மனவெழுச்சியின் தணிவானது  நுண்ணறிவாற்றலின் முறையான செயற்பாட்டிற்கோ, குழந்தைகளுக்கோ அல்லது வளர்ந்தவர்களுக்கோ அத்தியாவசியமான ஒரு நிபந்தனையாகும். வெற்றியின் உணர்வும், பெறுபேறுகளும் நன்னிலையான ஆளுமையை உருவாக்கும். ஈடுபாடுஇ வெற்றி இவற்றின் அனுகூலமான மனவெழுச்சியின் ஊக்குதலை நாம் கவனத்திற் கொண்டு நமது சக்தியைச் சிறந்த விருத்திக்குப் பயன்படுத்த வேண்டும். ஊற்சாகமூட்டல், புகழ்தல், தனியுதவி, கருணை கஷ்டத்தின்  போது இரக்கமான யோசனை கூறல் என்பவற்றால் புத்தியான பிள்ளை கூட நன்மை அடையலாம்.

தோல்வி, பயம், ஏமாற்றம்,  கடுமையான விமர்சனம், பழிச்சொல், தண்டனை, உடல் நலமின்மை, போட்டி என்பன சுதந்திர உணர்ச்சியையும், சுய கட்டுப்பாட்டையும் குழந்தைகளிடம் எப்போதுமே ஏற்படுத்த வேண்டும். எனவே எல்லா ஆசிரியரும் குழந்தைகள் வளர்ந்தவர்களுக்கான அடிப்படை மனவியல் சுகாதாரத்தில் கட்டாயமாகப் பயிற்சி பெறல் வேண்டும். இலவசமாக மனோவைத்திய ஆலோசனையும் பரிகாரமும், பயிற்சியோடு செய்முறை அனுபவமும் எல்லா ஆசிரியருக்கும் கிடைக்கச் செய்தல் வேண்டும். இவற்றால் எல்லா ஆசிரியருக்கும் உளவியல் அறிவு மிக இன்றியமையாதது என்பதை நாம் உணர்கிறோம்.

M.N.F. ISRATH NIHA (SHAHWI), (MA-II), MIT(B.SC)(R),LLB(R)
SOUTH EARTERN UNIVERSITY OF SRI LANKA