புலம்பெயர் சமூகம் இன்னும் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ளவில்லை.

(எஸ்.கார்த்திகேசு)

தமிழ் மக்களின் விடிவுக்காக தமது உயிர்களை தியாகம் செய்த  எமது போராளிகளுக்காக மட்டு/அம்பாறை மாவட்டங்களில் அமைக்கப்பட்டுடிருந்த மாவீரர்களின் துயிலும் இல்லங்களை தற்போது துப்பரவு செய்யும் பணிகளின் எமது போராளிகளும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இவ்வற்றுக்கான எந்தவித பங்களிப்புக்களும் மேற்கொள்ளாது எமது புலம் பெயர்  சமூகம் தூக்கத்தில் இருப்பதாக மட்டு/அம்பாறை மாவட்ட ஜனநாயக போராளிகள் கட்சியின் இணைப்பாளரும் முன்னாள் போராளியுமான கே.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில்  9ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற சிரமதானப் நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்படி குற்றச் சாட்டினை முன்வைத்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர்நீர்த்த மாவீரர்களின் குடும்பங்கள் மற்றும் முன்னாள் போராளிகளாகிய நாங்கள் இன்று பல துன்ப நிலையில் வாழ்கையை முன்னெடுத்துக் கொண்டு மாவீர்களின் நினைவேந்தல்களை எதிர்வரும் மாவீரர்கள் நினைவு நாளினை அனுஷ்டிப்பதற்கான நடவடிக்கையில் எம்மால் முடிந்த வரையில் ஈடுபட்டுவருகின்ற போதிலும் புலம்பேர் தமிழ் சமூகமும் இந்த நாட்டில் வாழ்கின்ற உறவுகளும் உதவிகளை செய்யாது உறக்கத்தில் இருந்து கொண்டு இருக்கின்றனர்.

மட்டக்களப்பில் மூன்று துயிலும் இல்லங்களும்,அம்பாறை கஞ்சிகுடிச்சாறு பகுதியில் ஒரு துயிலும் இல்லமுமாக நான்கு துயிலும் இல்லங்கள் காணப்படுகின்றது.இதனை இந்த வருடத்தில் இருந்து பாதுகாத்து மாவீரர்களின் நினைவேந்தல்களை செய்வதற்கு தீர்மானித்தள்ளோம். என மட்டு/அம்பாறை ஜனநாயக போராளிகள் கட்சியின் இணைப்பாளரும் முன்னாள் போராளிலுமான கே.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.