வெல்லாவெளி கலைமகள் வித்தியாலய மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கிவைப்பு.

(ரவிப்ரியா)

வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு போரதீவு பற்று கோட்ட கல்விப் பணிப்பாளர் கே.பாலச்சந்திரன் மற்றும் பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் ஆகியோரின் வழிகாட்டலக்லுக்கமைவாகவும், அனுமதியுடனும் நடைபெற்றது. 24 மாணவர்களுக்கு பாதணிகள் சம்பிரதாயபுர்வமாக வழங்கிவைக்கப்படடது. பாதணிகளை கோவில்போரதீவு சமூக எழுச்சி மன்ற அங்கத்தவரும்,சமூக ஆர்வலரும் பிரபல வர்த்தகருமான ம.கோபிநாத் அன்பளிப்பாக வழங்கிவைத்ததுடன் நிகழ்விலும் கலந்துகொண்டார்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு வலய முகாமைத்துவ. பிரதிக் கல்விப் பணிப்பாளர் ரி.நித்தியானந்தனும், சிறப்பு அதிதியாக, ஆங்கில உதவிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரகாசனும்.  விசேட அதிதிகளாக ஆங்கிலபாட சேவைக்கால ஆலோசகர் ப.மகேஸ்வரன், பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர் மா.நாகமணி. மற்றும் போரதீவு பற்று எழுச்சி ஒன்றிய கலை விளையாட்டுக் கழக உறுப்பினர் கவிஞர் வி.நாகேஸ்வரன், ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாதணிகளை வழங்கிவைத்தனர்.