நல்லாட்சி அரசாங்கத்திற்கு சர்வ தேசத்தில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

(இ.சுதாகரன்)

 உயர் கல்வி மற்றும்  நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல
நாட்டில் தற்போது நடைபெறுகின்ற நல்லாட்சி செயற்பாடுகளுக்கு சர்வ தேசத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளது.

அவ்வாறான நல்லெண்ணச் செயற்பாடுகளுக்கு குந்தகம் ஏற்படாத வகையில் அனைத்துச் செயற்பாடுகளும் நடைபெற வேண்டும்.கடந்த காலத்தில் தாய் நாட்டில் ஆட்சி செய்த அனைவரும் பல தவறுகளை செய்திருக்கின்ற நிலையில் அவற்றினை உணர்ந்து அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் புதிய அரசியல் அமைப்பினை நல்லாட்சி அரசு ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியானது தமது கடந்த கால அரசியல் பாதையினை மாற்றி புதியதொரு திருப்பு முனையினை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு மட்டக்களப்பிலுள்ள மண்டூர் குருமண்வெளி பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற சபை முதல்வரும் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் அரசியலமைப்பு முறையானது 1976 ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய பிரமதர் சிறிமாவோ பண்டார நாயக்க அவர்களின் ஆடசிக் காலத்திலும் அதன் பின்னர் 1980 காலப்பகுதியில் ஆட்சி செய்த ஜெயா ஜேவர்த்தன அவர்களின் ஆட்சிக் காலத்தின் போது கொண்டுவரப்பட்டன.

இவ்விரு கட்சிகளும் தமிழ் மக்கள் உணர்வுகளை பொருப்படுத்தாது செயற்பட்டிருக்கின்றன.இதனால் பல பிரச்சினைகள் ஊற்பட்டன.எனவேதான் அரசியல் அமைப்பினை யாவரும் விரும்பக் கூடிய வகையில் அரசியல்  அமைப்பனை முதற் கட்டமாக நல்லாட்சி அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.

மதஇ இன பேதங்களுக்கு அப்பால் சிறுபான்மை இனங்களின் தேவையினை நிறைவு செய்யக் கூடிய வகையில் அரசியல் அமைப்பு உருவாக்கப்படவுள்ளது.

புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக நடைபெற்ற சுமார் 80 வீதமான அமர்வுகளில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் பங்கேற்றிருக்கின்றார்.மக்களின் உணர்வுகளுக்கு வாய்ப்பளிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி இதயசுத்தியுடன் மக்களுக்கு பங்காற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டிலுள்ளது.என்றுமே தடைக்கல் அல்ல.

சிங்களவர்கள் தமிழர் முஸ்லிங்கள் அனைவரும் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் குறிப்பாக புத்தபெருமான் அவர்களும் இந்தியாவிலிருந்து வந்தவர்தான்.இறுதியாக இலங்கையினை ஆட்சிசெய்த மன்னன் தமிழர் என்பதனை மறந்து விட முடியாது. எமது வரலாற்றினை சிறப்பாக நோக்குவோமானால் சண்டை பிடிக்க வேண்டிய அவசியம் கிடையாது.நாம் வரலாற்றினை மறந்து செயற்படுகின்றோம்.பாடசாலையில் கூட வரலாற்றினை கற்பதற்கு தவறுகின்றோம்.

எமக்கு1956 இ 1972 மற்றும் 1983 ஆண்டு காலப்பகுதியல் நடைபெற்ற கலவரங்கள் மாத்திரமே தெரியும் இன்னும் எத்தனையோ சம்பவங்கள் உள்ளன அவை பற்றி தெரியாது.

கண்டிக் காலத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் வட கிழக்கிலிருந்தே மணமக்களை பெற்றிருக்கின்றனர். அவ்வாறு வட கிழக்கு மக்கள் இருந்திருக்கின்றனர். வரலாறு என்றுமே மாறுவதில்லை.கடந்த கால சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அபிவிருத்திக்கு வித்திட வேண்டிய நிலைக்கு மாற வேண்டும்.

கொழும்பு முதல் மட்டக்களப்பிற்கு அதிவேக பாதையினை அமைப்பது தொடர்பாக அடுத்த வாரம் இலங்கை வரவுள்ள இந்திய நெடுஞ்சாலைகள் அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளோம்.அதில் கிழக்கு மாகாணத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பும் பெற்றுக் கொள்ளப்படும்.இதே போன்று வடக்கில் யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் மற்றும் மன்னாரிலிருந்து வவுனியா திருகோணமலை இ திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பிற்கும் அதிவேக பாதைகள் உருவாக்கப்படவுள்ளது.

இதற்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் இந்திய அரசாங்கம் வழங்கவுள்ளது.புதிய யுகத்தினை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப வேண்டிய தேவை அரசாங்கத்துக்குள்ளது.கிழக்கு மாகாணத்தில் சுமார் 38க்கு மேற்பட்ட ஹோட்டல்கள் உருவாக்கப்படவுள்ளது இதன் மூலமாக பத்தாயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும்.

இது ஆரம்ப முயற்சி எனக் குறிப்பிட்டார்.