யுத்த காலத்தில் கல்வியில் வீழ்ச்சி கண்டுள்ள பிரதேசங்களின் கல்வி முன்னேற்றத்திற்காக உழைக்கின்றார் வலயக்கல்விப்பணிப்பாளர் நஜீம்


(சா.நடனசபேசன்)

கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையினால் பெரிதும் பாதிக்கப்பட்டு கல்வியில் வீழ்ச்சி கண்டுள்ள இப் பிரதேசத்தின் கல்வினை முன்னேற்றுவதில் அயராத  முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.எஸ் நஜீம் அவர்கள் அவர்களின் சேவை பாராட்டுக்குரியது என முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.

சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வும் சேவையாளர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வும் திங்கட்கிழமை 9 ஆம் திகதி அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில்  நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

இந் நிகழ்வில் அதிதிகளாக சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம்; நாவிதன்வெளிக் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ். சரவணமுத்து வேப்பையடி வைத்தியசாலையின்; வைத்தியர் திருமதி. எஸ்.ஜே .அனீஸ் சம்மாந்துறை வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் கே.இரத்தினேஸ்வரன் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர்  கே.குமாரசாமி மற்றும் வித்தியாலயத்தில் ஆசிரியர்களாகக் கடமையாற்றிய கே. ஆற்புதராசா என்.வன்னியசிங்கம் வி.சஜீந்திரன் திருமதி.சுவானந்தி ரூபன் ஆகியோர்களுடன் வலயக்கல்விப்பணிப்பாளர்  எம்.எஸ்.எஸ் நஜீம் முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் ஆகியோர் பாடசலை சமூகத்தினால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

அவர் தொடர்ந்து பேசுகையில் கல்வி ஒரு இனத்தின் முன்னேற்றத்திற்கான ஆயும் அந்த ஆயுதத்தினை சரியாகப் பயன்படுத்தவேண்டும். என்பதில் அனைவரும் கரிசனையாகச் செயற்பட வேண்டியுள்ளது. 

இந்தப் பிரதேசம் கல்வியில் பெரிதும் பாதிக்கப்பட்டு கல்வியைப் சரியான முறையில் பெறாதவர்களாக இருந்தனர் அது இன்று மாற்றமடைந்து கல்வியில் சாதனைபடைக்கும் நிலை மாறியுள்ளது அதற்கு அடித்தளம் இட்டவர்கள் வலயக்கல்விப்பணிப்பாளர் ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளின் பங்காக இருப்பதனை இட்டுப் பெருமிதம் அடைகின்றேன்.

ஆசிரியர்கள் ஒரு சமூகத்தின் தலைவர்கள் இவர்கள் பாடசாலைக்குப் பொறுப்பானவர்களாக .இருந்தாலும் ஒரு சமூகத்தினை வழி நடத்தும் அத்தனை தகுதியும் பொறுப்பும் ஆசிரியர்களாகிய உங்களது கைளிலே தங்கியுள்ளது அவ்வாறான ஆசிரியப் பெருந்தகைகளைப் இந் நன்நாளில் கௌரவப்படுத்துவது காலத்தின் தேவையாக இருக்கின்றது.

ஒரு சமூகம் வீழ்ச்சி கண்ட சமூகமாக இருக்குமானால் அப்பகுதியில் சரியான முறையில் ஆசிரியர்களின் சேவை இடம்பெறவில்லை என்பது  ஜதாத்தம் ஆனால் இப்பகுதியினைப் பொறுத்தமட்டில்  வெளிப்பிரதேசங்களில் இருந்தே இப்பகுதிப் பாடசாலைகளில் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் வருகின்றனர் இந்தப் பிரதேசத்தில் ஆசிரியர்கள் குறைவாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் இவ்வாறு வெளிப்பிரதேசங்களில் இருந்து இப் பின்தங்கிய பிரதேச மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக உழைத்துக்கொண்டிருக்கும் ஆசிரியப் பெருந்தகைகளை இச்சமூகம் பாராட்டுவது சாலச்சிறந்ததாகும்

இப்பிரதேசத்தில் கல்வி வீழ்ச்சி மட்டுமல்ல பல்வேறு தேவைகள் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் இருந்துகொண்டு இருக்கின்றன அந்த தேவைகள் நிறைவேற்றப்படவேண்டும் அதற்கு நாம் அனைவரும் கைகோர்த்து ஒற்றுமையாக செயற்பட வேண்டியுள்ளது எனத் தெரிவித்தார்.