பொலித்தீன் பாவனைக்கு பதில் வாழை இலைகளை பயன்டுத்தல் தொடர்பில் விழிப்புணர்வு கண்காட்சி

பொலித்தீன் பாவனைக்கு பதிலாக வாழை இலைகளை அவித்து பயன்படுத்தும் முறைகள் தொடர்பாக பொதுமக்களிற்கு விழிப்புணவர்வை ஏற்படுத்தும் கண்காட்சி இடம்பெற்றது.

இராணுவத்தினரின் தலைமையில் கடந்த 16 மற்றும் 17ஆம் திகதிகளில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற இந்தநிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.

ஜனாதிபதியவர்களின் தலைமையில் மஹாவலி அதிகார சபையின் பங்களிப்போடு முன்னெடுக்கப்படும் நாட்டின் இயற்கையை பாதுகாக்கும் செயற்திட்டத்தில் இராணுவத்தின் விவசாய பணியகத்தின் பணிப்பாளரான பிரிகேடியர் புவனேக குணரத்தன தலைமையில் இக் கண்காட்சி இடம்பெற்றது.

 அவித்த வாழை இலைகளை பொலித்தீனுக்குப் பதிலாக பயன்படுத்துவதன் மூலம் பொலித்தீன் பாவனையை தவிர்த்தல் மற்றும் இவ்அவித்த வாழை இலைகளை மூன்று மாதங்களிற்கு மேலாக உபயோகிக்க முடியும் என்றும் இராணுவத்தினர் இக்கண்காட்சியில் செய்முறை மூலம் விளக்கியுள்ளனர்.

இதன் போது உணவைப் பொதி செய்யும் பின்னப்பட்ட ஓலைப் பெட்டியும் இந்நிகழ்வில் காட்சிப் படுத்தப்பட்டதோடு மேலும் இராணுவத்தினர் இலவசமாக இவ்வாழை இலைகளை பொது மக்களின் பாவனைக்காக வழங்கினர்.