துறைநீலாவணையில் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை லயன் ஸ்டார் விளையாட்டு கழகம் பரிசு வழங்கி கௌரவித்தது.



துறைநீலாவணை லயன் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் துறைநீலாவணை கிராமத்தில் உள்ள பாடசாலைகளில் இருந்து இவ்வாண்டு(2017) நடைபெற்ற புலமைப் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு புதன்கிழமை (18.10.2017) பிற்பகல் 3.30 மணியளவில் துறைநீலாவணை பல்தேவைக் கட்டிடத்தில் நடைபெற்றது.துறைநீலாவணை லயன் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் தலைவரும்,மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவனுமான எஸ்.வியாசன் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் ஆன்மீக அதிதியாக துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதம பூசகர் கு.நல்லராசா அவர்களும்,அதிதிகளாக துறைநீலாவணையில் உள்ள மெ.மி.த.க.பாடசாலையின் அதிபர் கு.மனோகரன்,முத்துமாரியம்மன் ஆலையத்தலைவர் கே.யோகராசா,ஊடகவியலாளர்களான சா.நடனசபேசன்,க.விஜயரெத்தினம், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் தி.தயாளன்,விளையாட்டுக்கழகத்தின் செயலாளர் ரீ.ரூபக்குமார்,பொருளாளர் எம்.நிஷாந்தன்,உப-தலைவர் மு.ஜெயந்தன்,மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள்,விளையாட்டுக்கழகத்தின் பிரநிதிகள் கலந்து கொண்டார்கள். இதன்போது எட்டு மாணவர்களும் அதிதிகளால் பதக்கம் அணிவித்து,பாராட்டி, பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.