சீரற்ற காலநிலை

வங்காள விரிடாவின் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் நிலவிவரும் தாழமுக்க தளம்பல் நிலை மேலும் வலுவடைந்து அதன் தாக்கத்துடன் இலங்கையிலிருந்து நகர்ந்துவருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருமேகக்கூட்டம் தொடர்ந்தும் இடம்பெறக்கூடும். ஓரளவுக்கு கடும் காற்றும் வீசும். நாட்டை சுற்றியுள்ள கடற்பிரதேசத்தில் இந்த நிலை சிலதினங்களுக்கு தொடரும் .

மேற்கு சப்ரகமுவ மத்திய வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மழை அல்லது இடியுடன் கூடிய மழை விசேடமாக மொனறாகல அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களின் பல இடங்களில் பெய்யக்கூடும்.

50 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி சில இடங்களில் பதிவாகக்கூடும். இடிமின்னல் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.