பொதுமக்களுக்கு எச்சரிக்கை! – அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்

தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் நிலவிவரும் சீரற்ற காலநிலை தொடரும் எனவும், தொடர்ந்தும் மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாடுமுழுவதும் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை தொடருவதன் காரணமாக களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் அடுத்துவரும் 24 மணிநேரகாலப்பகுதிக்குள் 100 தொடக்கம் 150 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவுவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தொடர் மழைவீழ்ச்சி காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக, அகலவத்தை, பதுரலிய, இங்கிரய போன்ற தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது