மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் சிறுநீரக நோய்த்தடுப்புத் தேசிய நிகழ்ச்சித்திட்ட செயலமர்வு

(க.விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் சிறுநீரக நோய்த்தடுப்புத் தேசிய நிகழ்ச்சித்திட்ட செயலமர்வு நடைபெற்றது.கல்வி அமைச்சின் பேண்தகு பாடசாலை நிகழ்ச்சி திட்டத்தின் அறிவுறுத்தளுக்குமைவாகவும், மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் அவர்களின் வழிகாட்டல்களுடன் "அழகிய சிறுவர் உலகம்-பேணிப் பாதுகாக்கப்பட எதிர்காலம் "எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் காட்மண்ட் மண்டபத்தில் (19.10.2017) காலை 11.00மணியளவில் நடைபெற்றது.



இச்செயலமர்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விஷேட வைத்திய நிபுணர் Dr முத்து முருகமூர்த்தி அவர்கள் பல்லூடகத்தின் மூலம் நமது சிறுநீரகங்கள், சிறுநீரக கோளாறுக்கான காரணிகள், சடுதியான சிறுநீரக செயலிழப்பு (Acute kidney failure), நாட்பட்ட சிறுநீரக பாதிப்பு(Chronic kidney disease), அறிகுறிகள், ஆரம்ப சோதனைகள், சிசிச்சை, குருதி சுத்தப்படுத்தல் (Dialysis), தடுத்தல், போன்ற விடயங்களையும், ஆலோசனைகளையும் கருத்துக்களையும் முன்வைத்தார். இச்செயலமர்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டார்கள். மாணவர்களுக்கு உணவு பழக்கவழக்கம் சம்பந்தமாக தெளிவூட்டப்பட்டு  "இலைக்கஞ்சி" தாயாரித்து வழங்கப்பட்டது.