சுவிஸ் பிரைஜைகளால்; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கிவைப்பு


(சா.நடனசபேசன்)


ஐரோப்பா வாழ் தமிழ் மக்களின் ஆதரவுடன் மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் கைவிடப்படும் நிலையில் உள்ள பாடசாலைகளின்  எதிர்காலம் கருதி பிரதேச தமிழ் மக்களின் பிறப்பு வீதத்தை அதிகரிக்கும் நோக்கில் முதல் கட்டமாக 16.10.2016 அன்று நரிபுல்தோட்டம் மகிழ்வட்டவான் ஆகிய கிராமங்களில் 2 குழந்தைகளுக்குமேல் பெற்றெடுத்த 13 தாய்மார்களுக்கு தலா ரூபா 10,000 பணமும் பிள்ளை பராமரிப்புச் செலவுக்காக பிள்ளையின் 18 வயது வரை மாதம்தோறும் 1,000 ரூபாயும் வழங்கி கன்னி முயற்சியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதன் பிறகு மேலும் நான்கு கிராமங்களான நெல்லூர், மணிபுரம், மகிழவட்டுவான்  மற்றும் பன்குடாவெளி ஆகிய கிராமங்கள்  உள்வாங்கப்பட்டு தற்போது மொத்தமாக 37 தாய்மார்கள் உதவி பெற்று வருகின்றமை குறிப்பிட்ட தக்கது .


இத் திட்டத்துக்கு ஆரம்ப காலத்தில் இருந்து உதவி வருபவர்களான சுவிஸ் நாட்டில் Bern மாநகரில் வசிக்கும் திரு.  திவாகரன், திருமதி .ராதிகா திவாகரன் அவர்களின் மகன் அர்ஜுன் மற்றும் மகள் ஐஸ்வர்யா ஆகியோர் நேரில் சென்று இத்திட்டத்தின் மூலம் உதவி பெறும் குடும்பங்களை கண்டு அவர்களின் நிறை குறைகளை இன்று புதன்கிழமை 11 ஆம் திகதி கேட்டு அறிந்தனர் .


அத்துடன் இத்திட்டத்தினை முன்னெடுத்துச் செல்லும் சுவிஸ் வாழ் அமிர்தலிங்கத்தை பாராட்டியதோடு இத்திட்டத்தினை எதிர்வரும் காலங்களில் மேலும் பல கிராமங்களை உள்வாங்கி நடைமுறை படுத்த வேண்டும் எனவும் கூறி இதற்கான முழு ஆதரவு தருவதாக உறுதியளித்தனர்.

 இந் நிகழ்வில் அதிதிகளாக மண்முனை மேற்கு கல்வி வலயத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளர்களான  திரு.எஸ்.மகேந்திரகுமார் திரு.க.ஹரிகரராஜ், கலந்து சிறப்பித்தனர் .