பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் ஏழு மாணவர்கள் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி

(இ.சுதாகரன்)


 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பட்டிருப்ப கல்வி வலயத்திற்குட்பட்ட பெரிய கல்லாறு உதயுபுரம் தமிழ் வித்தியாலயத்தில் ஏழு மாணவர்கள் மட்டக்களப்பு மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளியினைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

இதில் ஜெ.டிலுஜா 180 , உ.நமிதா 176 , அ.கிசோரன் 167 , க.ஹேமினா 165 , ச.குபேசாலினி 161 , கு.டிலக்சி 159, வி.லோகிதன் 157 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு மாத்திரமல்லாது கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

மாணவர்களை குறித்த பரீட்சைக்கு வழிப்படுத்திய வித்தியாலயத்தின் முதல்வர் சி.பேரின்பராசா மற்றும் ஆசிரியர்களான திருமதி பு.மயில்வாகனம் , திருமதி உ.விக்னேஸ்வரன் மற்றும்  மேலதிக வகுப்புக்களை இலவசமாக நடாத்திய இ.தவறாஜ் ஆகியோருக்கு மாணவர்களின் பெற்றோர் நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துள்ளனர்.கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் குறித்த பாடசாலையில் 7 மாணவர்கள் சித்தியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.