சிறையில் உள்ள புலிகள் அரசியல் கைதிகளா? சரத் பொன்சேகா கேள்வி

தற்போது சிறையில் உள்ள புலிகள் மிகவும் மோசமான குற்றவாளிகள், அவர்களுக்கு சட்ட ரீதியில் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் புதன்கிழமை  நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு  உரையாற்றும்  போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடந்து  உரையாற்றிய அவர், “ ஆயுதம் ஏந்தி நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சித்த விடுதலைப் புலிகளை நாம் கட்டுப்படுத்தி போராட்டத்தை முழுமையாக அழித்துள்ளோம். அவர்களில் மேசமான குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்

வடக்கில் உள்ள சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் இன்று இவர்களை அரசியல் கைதிகளாக அடையாளப்படுத்தி வருகின்றார்கள்.

இவர்களை ஒரு போதும் அரசியல் கைதிகளாக அடையாளப்படுத்த முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தக்குற்றங்கள் இடம்பெற்றதாக தெரிவித்து இராணுவத்தை தண்டிக்க முயற்சிக்கும் இவர்கள் புலிகளை மட்டும் எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?

மேலும் எமது இராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தவோ, அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கவோ தாம் இடமளிக்கப்போவதில்லை” என்றும் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.