Wednesday, November 22, 2017

கிழக்கு மாகாணத்தில் 1442 பட்டதாரிகள் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.

ads



(கதிரவன்)

கிழக்கு மாகாணத்தில் 1442 பட்டதாரிகள் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். இவர்களுக்கான நியமன கடிதங்கள் சனிக்கிழமை 2017.11.25 திருகோணமலையிலும், ஞாயிற்றுக்கிழமை 2017.11.26 மட்டக்களப்பிலும் வைத்து வழங்கப்ட உள்ளதாக் கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகம தெரிவித்தார்.

புதன்கிழமை 2017.11.22 பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் வழங்கல் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு ஆளுநர் அலுவலகத்தில்  நடைபெற்றது. பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் பட்டதாரிகளில் சிலர் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். இவர்கள் போட்டி பரீட்சை ஒன்றில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு உள்ளர்.

திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட உள்ள பிரமாண்ட மண்டத்தில் வைத்து பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமன கடிதங்கள் சனிக்கிழமை 2017.11.25 வழங்கி வைக்கப்பட உள்ளது. இந்நிகழ்வுக்கு அரசியல்வாதிகள் கட்சி  பேதம் இன்றி அழைக்கப்பட உள்ளார்கள்.  மட்டக்களப்பு  மாவட்ட ஆசிரியர்களுக்கான  நியமன  கடிதம் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை 2017.11.26 புனித சிசிலியா பெண்கள் கல்லூரியில் வைத்து  வழங்கப்பட  உள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் 1442 பட்டதாரிகள் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். Rating: 4.5 Diposkan Oleh: - Office -
 

Top