மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய வருடாந்த சாரணர் பாசறை - 2017


மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கான வருடாந்த சாரணர் பாசறை நிகழ்வானது கடந்த 2ம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் 4ம் திகதி சனிக்கிழமை வரை மட்/மமே/ கொத்தியாபுலை வாணி வித்தியாலத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் 15 சாரண ஆசிரியர்களும் 130 சாரண மாணவ மாணவியரும் கலந்து கொண்டனர்.

இரண்டாம் நாள்; சாரண மாணவர்களுக்கு உடற்பயிற்சி திறன் விருத்தி செயற்பாடுகள் இடம் பெற்றதுடன், தீப்பாசறை நிகழ்வும் நடைபெற்றது.

சாரண மாணவர்கள் அமைத்த பாசறைகளிற்கு புள்ளிகள் வழங்கப்பட்டு , போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திய சாரணமாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.

பாசறை நிகழ்வின் முதலாம் நாளில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பணிப்பாளர் அகிலா கனகசூரியம் அம்மணி கலந்து கொண்டதுடன் இரண்டாம் நாள் நிகழ்வில் வவுணதீவு கோட்டக்கல்விப்பணிப்பாளரும், மாவட்ட சாரணர் ஆணையாளர் E.P.ஆனந்தராஜா ஐயாவும் கலந்து கொண்டனர்.

இறுதிநாள் நிகழ்வில் வெற்றி பெற்ற மட்/மமே/ அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலய சாரண மாணவர்களுக்கு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் கரிகரராஜ் அவர்களினால் வெற்றிகிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது.

இப்பாசறை நிகழ்வில் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கலந்து கொண்ட பாடசாலைகளின் அதிபர்களும் சமூகமளித்திருந்தனர்.