பட்டிருப்பு கல்வி வலயத்தில் 2018 ஆம் ஆண்டில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் செயற்றிட்டம்.



(சித்தா)


2018 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களை பரீட்சைக்கு ஆயத்தப்படுத்தும் செயற்றிட்ட நிகழ்வு இன்று மட்/ பட்/ பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலய (தேசிய பாடசாலை) மண்டபத்தில் பட்டிருப்பு கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பா.வரதராஜன் தலைமையில் நடைபெற்றது.


இந் நிகழ்வில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ஆர்.சுகிர்தராஜன் அவர்கள் பரீட்சைக்கும் தோற்றும் மாணவர்களுக்கான செயலட்டைகளை ஆசிரியர்களுக்கு வழங்கி செயற்றிட்டத்தினை ஆரம்பித்து வைத்தார். அத்துடன் பட்டிருப்பு வலய, கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் செல்வி. கே.ஜயந்திமாலா, மண்முனைத் தென் எருவில் பற்றுக் கோட்டக் கல்விப் பணிப்பாளரும், போரதீவுப்பற்றுக் கோட்ட பதில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.வி.திரவியராசா அவர்களும் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் பட்டிருப்பு கல்வி வலய ஆரம்பக் கல்வி சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களான திருமதி.ர.நவரெட்ணராசா, திருமதி.த.சபாரெட்ணம், திருமதி. ச. தில்லைநாதன் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


64 பாடசாலைகளிலிருந்தும் 75 ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டு தங்கள் பாடசாலை மாணவர்களுக்கான செலட்டைகளைப் பெற்றுக் கொண்டனர். 2018 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு 64 பாடசாலைகளிலிருந்தும் சுமார் 1835 மாணவர்கள் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.