கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலைக்கு கடின பந்து ஆடுகள விரிப்பு வழங்கிவைப்பு

 (அகமட் எஸ். முகைடீன்)

கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலைக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸினால் கடின பந்து ஆடுகள விரிப்பு வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (13) திங்கட்கிழமை பாடசாலை அதிபர் வி. பிரபாகரன் தலைமையில் பாடசாலை ஆராதனை மண்டபத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் எம். ரங்கராஜன், பிரதி அதிபர்கள், விளையாட்டுத்துறை ஆசிரியர்களான ஆர். ஜீவகடாச்சம், எம். றிஸ்மி உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது இப்பாடசாலையின் கடின பந்து கிறிக்கெட் விளையாட்டினை மேம்படுத்தும் வகையில் பெறுமதிவாய்ந்த கடின பந்து ஆடுகள விரிப்பு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரினால் குறித்த பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.


மேலும் கிழக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான பரா ஒலிம்பிக் போட்யில் வெற்றிபெற்ற இப்பாடசாலையின் விஷேட தேவையுடைய பிரிவு மாணவர்களான இந்துமதி, ஹரனி, சங்கீர்த்தனா, றஸ்மி, சௌஃபி, றிஸ்கா, அல்தாப், ஜெயந்த ஆகியோரை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் பாராட்டி பதக்கங்கள் அணிவித்து கௌரவித்தார்.