Wednesday, November 22, 2017

கல்லடி பாலத்திற்கு அருகாமையில் விபத்து- ஒருவர் காயம்

ads

மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும் அதே பாதையில் சென்ற மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோடி இந்த விபத்து நேர்ந்துள்ளது. முச்சக்கரவண்டியை முந்திச் செல்ல முயன்றபோதே விபத்து சம்பவித்துள்ளது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

கல்லடி பாலத்திற்கு அருகாமையில் விபத்து- ஒருவர் காயம் Rating: 4.5 Diposkan Oleh: - Office -
 

Top