கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையின் வரலாற்றுத் தினம்



கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையினரால் 2017.11.14 ஆம் திகதி 'வரலாற்றுத் தினம்' கொண்டாடப்படவுள்ளது.அரச வர்த்தமானி மூலம் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைக்கு அறிவிக்கப்பட்;ட தினத்தை (2010.11.14) இனிவரும் காலங்களில் வரலாற்றுத்தினமாகவருடந்தோறும் கொண்டாட வரலாற்றுத்துறையினரால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையின் தலைவர் எஸ்.கே.சிவகணேசன் தலைமையில் விழா நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இந்நிகழ்வில் வரவேற்புரையினை வரலாற்றுத்துறை விரிவுரையாளர் செல்வி.பொ.நிலாந்தினி ஆற்றுவார்.
இவ்விழாவில் யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் இணைப்பாளரும் வட மாகாணத்திற்கான மத்திய கலாசார நிலையத்தின் பணிப்பாளருமான சிரேஸ்ட பேராசிரியர் ப.புஷ;பரட்டிணம் அவர்களின் இரண்டு நூல்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. அந்நூல்கள்: 'இலங்கைத் தமிழர் வரலாறு','ஈழத் தமிழர் மரபுரிமை அடையளங்கள்' என்பனவாகும்.
கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையின் தலைவர் எஸ்.கே.சிவகணேசன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த.ஜெயசிங்கம் கலந்து சிறப்பிக்கப்படவுள்ளார்.சிறப்பு அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உபவேந்தர் வைத்தியகலாநிதி கே.இ.கருணாகரன் அவர்களும் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி திரு.எம்.ரவி அவர்களும் கலந்து சிறப்பிக்கப்படவுள்ளனர்.இந்நிகழ்விற்கு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களின் பீடாதிபதிகளும் பணியாளர்களும் பங்குபற்றிச் சிறப்பிக்கவுள்ளனர்.அழைப்பு அதிதிகளாக துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
நூல் அறிமுகவுரையினை கலாநிதி செ.யோகராசா (முன்னை நாள் பேராசிரியர்) அவர்களும் கிழக்குப் பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத் துறையின் இணைப்பாளர் வண.பிதா.ஏ.ஏ.நவரட்ணம் ஆகியோர் வழங்கவுள்ளனர்.சிரேஸ்ட பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் அவர்களின் அறிமுகவுரையினை வரலாற்றுத்துறையின் உதவி விரிவுரையாளர் செல்வி.போ.யே.கி.நிரோஜினி ஆற்றுவார்.
இந்நிகழ்வில் கிழக்கின் வரலாற்றினை ஆவணப்படுத்துவதில் முன்னின்று உழைத்துவரும் இருவர் கௌரவப்படுத்தப்படவுள்ளனர். ஒருவர் கவிக்கோர் வெல்லவூர்க்கோபால் மற்றையவர் மட்டு மாவட்ட முன்னைய நாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி.க.தங்கேஸ்வரி ஆகியோராவார். கௌரவிப்பாளர்கள் தொடர்பிலான அறிமுகவுரையினை வரலாற்றுத்துறை விரிவுரையாளர் செல்வி.பு.கௌரி வழங்குவார்.
முழுக்க முழுக்க வரலாற்றுக் கழக மாணவர்களினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடையாளப்படுத்தும் ஒளிப்படம் ஒன்றும் அவர்களால் காட்சிப்படுத்தப்படவுள்ளது. இத்தொகுப்பினை வரலாற்றுச் சிறப்புக்கற்கை விடுகை வருட மாணவன் யோ.ஜெயதர்சன் தலைமையிலான குழுவினர் தயாரித்துள்ளனர்.நன்றியுரையினை வரலாற்றுக்கழக தலைவர் செல்வன்.இ.லெபந்தன் வழங்குவார். 
இந்நிகழ்வில் ஆர்வமுள்ள அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையின் தலைவர், விரிவுரையாளர்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புக்கற்கை மாணவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்