மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலை வீதிகளில் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் கட்டாக்காலி மாடுகள் காணப்படுகின்றது

(க.விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு -கல்முனை, மட்டக்களப்பு -வாழைச்சேனை ஆகிய நெடுஞ்சாலை வீதிகளில் கட்டாக்காலிகள் காணப்படுகின்றது.இவ் கட்டாக்காலிகள் இரவு, பகல் வேளைகளில் வீதிகளின் இரண்டு பக்கமும் காணப்படுவதால் போக்குவரத்து செய்ய முடியாமல் உள்ளதாக வாகன சாரதிகள்,பொதுமக்கள் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.

வீதிகளில் தினமும் காணப்படும் இக்கட்டாக்காலிகளினால் விபத்துக்கள் இல்லாத போக்குவரத்தினை தாங்கள் மேற்கொள்ள வேண்டுமென பாதசாரிகள் எதிர்பார்க்கின்றார்கள்.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்டக்களப்பு மாநகரசபை, காத்தான்குடி நகரசபை,ஆரையம்பதி பிரதேச சபை,களுவாஞ்சிகுடி பிரதேச சபை, ஏறாவூர் நகரசபை,செங்கலடி பிரதேச சபை,வாழைச்சேனை பிரதேச சபை, ஓட்டமாவடி பிரதேச சபை போன்ற உள்ளுராட்சி மன்றங்களின் உயர் அதிகாரிகள், கால்நடை வைத்திய அதிகாரிகள், மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி போன்றோர்கள் இணைந்து நெடுஞ்சாலை வீதிகளில் விபத்துக்களை ஏற்படுத்தும்  கட்டாக்காலிகளை பிடித்து கட்டாக்காலி வைத்திருப்போருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கட்டாக்காலிகளை முறையான பராமரிப்பில் வளர்க்க வேண்டும்.முறையான பராமரிப்பில்லாமல் கட்டாக்காலிகள் வீதிகளில் நடமாடுகின்றது.உள்ளுராட்சி சட்டதிட்டத்தின் பிரகாரம் உள்ளுராட்சி மன்றத்தின் கால்நடை வைத்திருப்போர் நடந்து கொள்ள வேண்டும்.விபத்துக்கள் இல்லாத நாட்டை கட்டியெழுப்புவதில் காவல்துறை செயற்படுகின்றது.

இந்த வகையில் இந்த ஆண்டில்(2017)  இன்றுவரையும்(2017.10.31) விபத்துக்களினால் 2500 மேற்பட்டவர்கள் மரணித்துள்ளார்கள் என்று புள்ளிவிவரம் சுட்டிக்காட்டுகின்றது.மேலும் கை, கால்கள், தலைப்பகுதி போன்றவற்றில் பலர் பலத்த காயங்களுடன் தப்பியும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.