முதியோரின் வாழ்க்கை அனுபவங்களை,திறன்களை இளையோருக்கு எடுத்துச்செல்ல முதியோர்தினம் நல்ல சந்தர்ப்பம்

                                                     
(ஜெ.ஜெய்ஷிகன்)

சர்வதேச முதியோர்தின விழா இன்று(16)  முதியோர் சம்மேளனத் தலைவர் கந்தையா நடேசன் தலைமையில்  நடைபெற்றது. வாழைச்சேனை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற்றது.

‘முதுமைக்குள் புதுமை காண்போம்’ என்ற தொனிபொருளில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன், மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் சாரங்கபாணி அருள்மொழி, சமூகசேவைகள் உத்தியோகத்தர் அ.நஜீம்,அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன், வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் அதிபர் அ.ஜெயஜீவன்,முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் பி.விஸ்வகோகிலன், கிராமசேவை உத்தியோகத்தர்கள்ää செயலக உத்தியோகத்தர்கள், 12 கிராம மட்ட முதியோர் அமைப்புக்களின் நிருவாகத்தினர்ää கலைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
முதியோர்களுக்கு மாணவர்கள் மாலை அணிவித்து ஆசீர்வாதம் வேண்டும் நிகழ்வு சிறப்பிடம் பெற்றது.

கலை நிகழ்வுகளில் கோறளைப்பற்று வாழைச்சேனை முதியோர் சங்கத்தினர், பாடசாலை மாணவர்கள் ‘ ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கான ஆடல் முதியோர்களின் திறன்களை பறை சாற்றியதுடன் இன்றைய இளையோருக்கு சவால் விடுத்ததையும் அவதானிக்க முடிந்தது. பாடல், நாடகம், நடனம் மதியோர்களின் திறன்களை வெளிக்கொணரும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுமு; குறிப்பிடத் தக்கது.