இலங்கையில் மீண்டும் எரிபொருள் தட்டுபாடு?

பல பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாது விடத்து   எதிர்வரும் வாரங்களில் மீண்டுமொருமுறை எரிபொருள் தட்டுபாடு ஏற்படும் நிலை ஏற்படும் என  கனியஎரிபொருள் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

எனவே எரிபொருள் தட்டுபாட்டினை தவிர்க்கும் வகையில் எரிபொருளினை சேமித்து வைக்கக்கூடிய தாங்கிகள் தேவையாகவுள்ளதாக குறித்த தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் டீ.ஜே.ராஜகருணா தெரிவித்துள்ளார்.

தற்​போது காணப்படும் எரிபொருள் தாங்கி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு புதிய தாங்கிகள் அமைப்பது அவசியமில்லை என்றும்,திருகோணமலை துறைமுகத்தில் காணப்படும் எரிபொருள் தாங்கி கூட்டுதாபனத்தை அரசு பொறுப்பேற்றால் புதிய எரிபொருள் தாங்கிகள் அமைப்பதற்கான தேவை ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு காணப்படும் 10 தாங்கிகளை மீண்டும் அரசு பொறுப்பேற்பதற்கு இரண்டு தடவைகள் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் எரிபொருள் களஞ்சிய தாங்கிக்கான பற்றாக்குறை இல்லை என்றால் எதற்காக அமைச்சரவை தாங்கியினை பொறுப்பேற்க அங்கீகாரம் வழங்கியதாகவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில் அவ்வாறான பிரச்சினை இல்லை என்று தெரிவித்து திருகோணமலை துறைமுகத்தில் உள்ள தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்க சிலர் யோசனைகளை முன்வைப்பது இந்தியாவின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து எனவும் கனிய எரிபொருள் தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டாளர் டீ.ஜே.ராஜகருணா சுட்டிக்காட்டியுள்ளார்.