விவசாயத் திணைக்களத்தின்ஏற்பாட்டில் பாரம்பரிய உணவுகள் ஊடாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு

பாரம்பரிய உணவு வகைகள் தயாரிப்பின் ஊடாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் எற்பாட்டில்,
மண்டபத்தடி விவசாயப்  பிரதேசஅலுவலகப் பிரிவின் காஞ்சிரங்குடா விவசாயப் போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலை கிராமத்தில் அண்மையில் இடம்பெற்றது.



மட்டக்களப்பு மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.பரமேங்வரன் அவர்களின் ஆலோசனைக்கமைவாக உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.சலிம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் 40க்கும் மேற்பட்ட தயாரித்த பாரம்பரிய உணவுகள்   காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இந் நிகழ்வின்போது பாரம்பரிய உணவுகள் வகைகளை இளம் சந்ததியினர் அறிந்துகொள்ளும் வகையிலும்,  பாரம்பரிய உணவுவகைகளினூடான உடலுக்கு கிடைக்கும் போசனை முக்கியத்துவம் தொடர்பிலும், நோய்களை எதிர்க்கக்கூடிய ஆரோக்கிய உணவுகள் தொ்ர்பிலும் இதன்போது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி விளக்கமளிக்கப்பட்டது.

பன்சேனை விவசாயப் போதனாசிரியர் திருமதி சுதர்சனா ஞானப்பிரகாசம் அவர்களின் ஒழுங்கமைப்புக்கு அமைவாக நடைபெற்ற இந் நிகழ்வில், பண்ணை பெண்கள் பாடவிதான உத்தியோகத்தர் திருமதி நித்தியா நவரூபன், விவசாய பாடவிதான உத்தியோகத்தர் திருமதி தி.நவருபன் உள்ளிட்ட விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.