தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்திய பேச்சுப் போட்டியில் களுவாஞ்சிக்குடி மாணவி தேசிய ரீதியில் இரண்டாம் இடம்

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்திய பேச்சுப் போட்டியில் மட் / பட்டிருப்பு தேசிய பாடசாலை , களுவாஞ்சிக்குடி மாணவி செல்வி.விஸ்வலிங்கம் குவினா மட்டக்களப்பு மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தையும் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்ட போட்டி மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்திலும் தேசிய மட்டப் போட்டிகள் மஹரகம இளைஞர் சேவைகள் மன்ற கட்டிடத் தொகுதியிலும் அண்மையில் இடம்பெற்றன.

வெற்றிபெற்று சாதனை படைத்து பாடசாலைக்கும் அதிபருக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் களுவாஞ்சிக்குடி பிரதேசத்திற்கும் பெருமை தேடித்தந்துள்ள இம்மாணவியையும் அவருக்கு பயிற்சி வழங்கிய ஆசிரியர் எஸ்.பி.சுதர்சனையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று ( 17 ) பாடசாலையில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் இடம்பெற்ற பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்களான  என்.நாகேந்திரன் எம்.சுவேந்திரராஜா ரீ.ஜனேந்திரராஜா உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் கல்விசாரா உத்தியோஸ்தர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.