வறிய மாணாக்கர்களின் கல்விக்கு உதவுவோம் முதியோரை வாழும் போது வாழ்த்துவோம்

(ஜெயா)

5ம் ஆண்டு புலமை பரீட்சையில் தோல்வி கண்ட மாணவனும் சரித்திரம் படைப்பான் அதில் ஒரு  உதாரணம் தான் நான் என ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் அனுசரனையில் வேப்பவெட்டுவான் சமுர்த்தி சங்கங்கள் இனைந்து நடாத்திய கல்விச்சாதனையாளர்கள் கௌரவிப்பும் முதியோர் கௌரவிப்பும் நிகழ்வில் கூறினார்.

மட்டக்களப்பு மற்றும் புலம்பெயர்ந்து வாழும் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் அனுசரனையில் வறிய மாணாக்கர்களின் கல்விக்கு உதவுவோம் முதியோரை வாழும் போது வாழ்த்துவோம் எனும் நிகழ்வு வேப்பவெட்டுவான் சமுர்த்தி சங்கங்கள் இனைந்து நடாத்திய நிகழ்வில் பிரதமவிருந்தினராக கலந்து கொண்ட ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் திரு.ந.வில்வரெத்தினம் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் அரசாங்கமே சகல உதவிகளையும் செய்யும் என்று என்னாமல் இவ்வாறான பிரபலம் வாய்ந்த கழகங்கள் பின் தங்கிய இக்கிராம மாணவர்களின் கல்விக்கு உதவுவது நமது மக்களின் கல்வித்தரத்தை ஊக்குவிக்கும் ஒரு செயலாகும். இளையோர் முதல் முதியோர் வரை கௌரவிக்கும் இச்செயற்பாடு யாவரையும் மதிக்கும் ஒரு செயற்பாடாவே காணப்படுகின்றது.

70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள் இங்கு கௌரவிக்கப்படும் பொழுது எனது 5ம் ஆண்டு புலமை பரீட்சை தான் ஞாபகத்திற்கு வருகின்றது நானும் உங்களைகப் போல் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெறாத மாணவன் தான் ஆனால் பிற்காலத்தில் சிறப்பாக கல்வி கற்று இன்று இந்நிலையில் உள்ளளேன் நீங்களும் பிற்காலங்களில் சிறந்த பெறுபேற்றை பெற்று முன்னிலைக்கு வரவேண்டுமென வாழ்த்தினார்.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் திரு.பி.குணரெட்ணம் அவர்கள் உரையாற்றுகையில் வேப்பவெட்டுhனில் இரண்டு மாணவர்கள் பல்கலைகழகம் சென்றுள்ளது சாதனை என்றே கொல்லவேண்டும் மற்றைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது நமது மாவட்டம் கல்வில் பின்தங்கி நிலையில் காணப்பட்டாலும் இவ்வாறான செயற்பாடுகளை கோட்டைமுணை விளையாட்டு கழகத்தின் அனுசரனையில் இக்கிராம சமுர்த்தி சங்கங்கள் ஓழுங்கமைத்து நடாத்துவது வரவேற்கத்தக்க விடயமாகும் என கூறினார்.

 இந்நிகழ்வில் கோட்டைமுணை விளையாட்டு கழக தலைவர் பி.சடாட்சரராஜா, கோட்டைமுனை  விளையாட்டு கழக செயலாளர் செந்தூரன் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ஜெயராஜ், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், கிராம அபிவிருத்தி சங்க தலைவர்கள், கிராம சேவை உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
சித்தியடைந்த மாணவி யோகராசா விதுர்ஷிக்கா கௌரவிக்கப்பட்டதுடன், 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 25 மாணவர்களும்  வாழும்போது வாழ்த்துவோம் எனும் தொணியில் 16 முதியோர்களும், 2016ம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறு பேற்றை பெற்ற சிவராசா மிதுர்சஷா கௌரவிக்கப்பட்டதுடன் 2016ம் ஆண்டு பல்கலைகழகத்திற்கு தெரிவாகிய அருந்தவநாதன் செல்வகுமார்  மற்றும் அருளானந்தம் சுலக்சனும் கௌரவிக்கப்பட்டனர். இவர்களுடன் இம்மாணவர்களை தயார்படுத்திய ஆசியர்களும் கௌரவிக்கப்பட்துடன் இக்கிராமத்தில் சேவையாற்றி மாற்றலாகி சென்ற சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆ.வரதராஜன் மற்றும் பொருளாதார உத்தியோகத்தர்ச.சௌந்தரராசா அவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் 15வது மாற்றம் சமுர்த்தி சஞ்சிகை வெளியிடப்பட்டது விசேட அம்சமாகும்.