​தொழிற்பயிற்சி அதிகாரசபையில் தொழிற் பயிற்சிநெறியினை நிறைவுசெய்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் வவுணதீவு பிரதேச தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற் பயிற்சிநெறியினை நிறைவுசெய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மண்முனை மேற்கு பிரதேச செயலக மண்டபத்தில் வியாழக்கிழமை  16ஆம் திகதி பிற்பகல்  நடைபெற்றது.

 

தொழிற்பயிற்சி நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.தாஹிர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், தொழிற்பயிற்சி அதிகாரசபை மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.டி.நளீம், வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ரி.நஸீர், மண்முனை மேற்கு பிரதேச சபை செயலாளர் செல்வி த.புத்திசிகாமணி உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் கடந்த 2015ஆம் ஆண்டில் பயிற்சியினை மேற்கொண்டு அப் பயிற்சியினை நிறைவுசெய்த இரண்டு தொகுதி மாணவர்களுக்கு (NVQ தர)சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இதில் மேசன், நீர்குழாய் பொருத்துனர், மரக் கைவினஞர் உள்ளிட்ட தொழிற்பயிற்சிகளை இம் மாணவர்கள் நிறைவுசெய்திருந்தனர்.

மேலும் இதன்போது, முன்னைய ஆண்டுகளில் தொழிற் பயிற்சியை நிறைவுசெய்து தற்போது தொடர்ந்து தாழிலை மேற்கொண்டுவரும் தெரிவுசெய்யப்பட்ட இளைஞர்களுக்கு தொழில் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வின்போது இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை ஆசிரியர்கள், கூட்டுறவுச் சங்க பொது முகாமையாளர், பாடசாலை அதிபர்கள்,  தொழிற்பயிற்சி  மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.