2018 இல் ஒவ்வொரு பிரஜையும் ஒரு இலட்சம் ரூபா கடனாளிகளாக இருப்பார்கள்.

அரசாங்கத்தின் வரி மூலமான வருமானம் வரலாற்றில் முதல் முறையாக அதிகரித்துள்ளது என்றுn பாரிய நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர்; பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் இரண்டாம் நாள் இன்றாகும்.


இதுதொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் பாட்டலி சம்பிக்க மேடலும் குறிப்பிட்டதாவது: வரவு செலவுத்திட்டத்தில் துண்டுவிழும் மொத்த தொகையை ஓரளவுக்கு கட்டுப்படுத்துவதற்கு இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் முடிந்துள்ளது அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கக்கூடியதாக அமைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் வரிமூலமான வருமானம் ஆயிரத்து 50 பில்லின் ரூபாவாகும். 2018ஆம் ஆண்டில் இத்தொகையை இரண்டாயிரத்து 34 பில்லியனாக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக வரி மூலமான வருமானத்தை மூன்று மடங்காக அதிகரிக்க முடிந்துள்ளது. அடுத்த வருடம் அரசாங்கம் பெரும் சிரமம் மிக்க நிலையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அடுத்த வருடத்தில் ஒவ்வொரு பிரஜையும் ஒரு இலட்சம் ரூபா கடனாளிகளாக இருப்பார்கள். இதில் 85 ஆயிரம் ரூபா மஹிந்த ராஜபக்ஷ யுகத்தில் பெறப்பட்ட கடனாகும்.

அபிவிருத்தியை அடையாளம் கண்டு அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமானநிலையம், நாட்டுக்கு சுமையாக இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் இவற்றுக்காக மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளை கொழும்புத் துறைமுகம், கட்டுநாயக்க விமான நிலையம் ஆகியவற்றின் அபிவிருத்திக்காக பயன்படுத்தியிருந்தால் நாட்டுக்கு பெரும் பயன் கிடைத்திருக்கும் என்றார்.