வாகரை பிரதேச பாடசாலைகளில் Future Mind அமைப்பினால் மரக்கன்று நடுகை செயற்றிட்டம்

                                                                         (ஜெ.ஜெய்ஷிகன்)
நாட்டின் பல மாவட்டங்களில் குறிப்பாக மலையப் பகுதிகளில் இயற்கை அழிவுகள் இடம்பெற்றுவருகின்றன. மரன்சரிவு, கடலரிப்பு, வெப்பநிலை அதிகரிப்பு, இயற்கை சுவாச வாயு குறைதல், மளம் குன்றுதல் போன்ற பாதிப்புக்களினால் மக்களின் எதிர்கால அன்றாட வாழ்வியல் கேள்விக்குறியாகியுள்ளது. மனித செயற்பாட்டினால் வனவளம் அழிவடைந்து போவதே இதற்கு முக்கிய காரணமாக குறிப்பிடலாம். இவ்வாறான பாதிப்புக்களை குறைத்து, இயற்கைச் சமனிலைப் பேணும் ஒரு செயற்பாடாக செவ்வாய்க்கிழமை (07.11.03.2017) Future Mind (எதிர்கால சிந்தனை) அமைப்பினால், வாகரைப் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 10 பாடசாலைகளில் மரக்கன்றுகள் நடுகை செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலை மாணவரிடையே மரக்கன்று நடுகை தொடர்பாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதன் ஊடாக, எதிர்கால மாணவர் சமுதாயத்தினரும் மரநடுகையின் முக்கியத்துவத்தினை அறிந்துகொண்டு, அவர்களும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதன் ஊடாக இலங்கை திருநாட்டில் பசுமையான ஒரு சூழலை உருவாக்குவதில் பங்குதாரராக தம்மை அர்ப்பனித்துக்கொள்ள முடியும். Future Mind அமைப்பின் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை பொறுப்பாளர் ச.கஜேந்தன் மற்றும் உறுப்பினர் ஜீவிதன் ஆகியோர் இணைந்து கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளரிடம் அனுமதி பெற்று, கீழ் குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு மரக்கன்றுகளை எடுத்துச் சென்று சிறப்பாக இச்செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தினர். 

கோறளைப்பற்று வடக்கு கோட்டப் பாடசாலைகளைகளான வாகரை மகா வித்தியாலயம் , பால்சேனை அ.த.க.பாடசாலை , கதிரவெளி விக்ணேஸ்வரா வித்தியாலயம் , வம்மிவட்டவான் வித்தியாலயம் , பச்சங்கேணி திருமகள் வித்தியாலயம் , மாங்கேணி றோ.க.த.க.பாடசாலை , காயங்கேணி சரஸ்வதி வித்தியாலயம் , வட்டவான் கலைமகள் வித்தியாலயம் , கண்டலடி அருந்ததி வித்தியாலயம் , இறாலோடை வள்ளுவர் வித்தியாலயம் இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசியரியர்கள், சுற்றாடல் கழக மாணவர்கள்,  மாணவர்கள் ஆகியோரின் இணைந்து இந்நிகழ்வினை சிறப்புச் செய்ய உதவினர். இறுதியில் மாணவர்களுக்கு மரக்கன்று நடுகையின் முக்கியத்துவம் தொடர்பாகவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.