அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் தீபம் ஏற்றும் நிகழ்வில் பொது மக்கள் கலந்துகொள்ளுமாறு அழைப்பு

அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் நினைவு இல்லத்தில் 11 ஆண்டுகளிற்கு பின்னர் பிள்ளைகளின் ஆத்ம சாந்திக்கான தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்;பட்டுள்ளது.

அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் நினைவு இல்லத்தில் 11 ஆண்டுகளிற்கு பின்னர் பிள்ளைகளின் ஆத்ம சாந்திக்கான தீபம் ஏற்றும் நிகழ்வு இடம்பெற உள்ளதாக முன்னாள் போராளி அமைப்பினர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
போரில் இறந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவு கூருவதற்கு ஏற்ப அம்பாறை மாவட்ட முன்னாள் போராளிகள் அமைப்பினர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அம்பாறை திருக்கோவில் கஞ்சிகுடிச்சாற்றில் அமைந்துள்ள கல்லறைகள் மற்றும் நடுகற்கள் அமைந்துள்ள இல்லத்தில் 2006ஆண்டுக்கு பின் முதன்முறையாக நினைவேந்தல்களை அனுஸ்;டிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வில் அனைத்து பொதுமக்கள் கலந்து கொள்ள முடியும் எனவும் எற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கஞ்சிகுடிச்சாறு மாவீரர்கள்; துயிலும் இல்லத்தில் கடந்த 1993ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டுவரை தமிழீழ விடுதலைப் புலிகளினால் தீபம் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டு வந்துள்ளது. அதன் பின்னர் அப்பிரதேசத்தில் நினைவேந்தல்கள் இடம்பெறவில்லை.

இதற்கமைய இம்முறை கஞ்சிகுடிச்சாறு இல்லத்தில் குடும்ப உறவுகளால் எதிர்வரும் 27ஆம் திகதி மாலை, 700 விதைக்கப்பட்ட மற்றும் கல்லறைகளாக்கப்பட்டவர்களிற்கான ஆத்மசாந்தி வேண்டி தீபம் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வினை நடாத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.