Tuesday, November 21, 2017

இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை !

ads

கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை-நீலண்ட மடு பிரதேசத்தில் இன்று(திங்கட்கிழமை) இரவு 7 மணியளவில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கற்சேனைப் பகுதியில் அமைந்துள்ள நீலண்டமடு எனும் இடத்தில் உள்ள வீடு ஒன்றில் இன்று இரவு தகராறு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனை அயலிலிருந்து அவதானித்துக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் தடுக்க முற்பட்டுள்ளனர். இவ்வேளையில் தகராற்றில் ஈடுபட்ட நபர் அவரது கையிலிருந்த சீவல் தொழிலுக்காகப் பயன்படுத்தும் கத்தியினால், தடுக்கச் சென்ற இளைஞர் ஒருவரின் வயிற்றை வெட்டியுள்ளார். மேலும் மற்றைய இளைஞனுக்கும் சிறு காயம் ஏற்பட்டுள்ளது.

வயிற்றுப் பகுதியில் வெட்டுப்பட்ட இளைஞன் அந்த இடத்திலேயே பலியாகியுள்ளான். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் அரசடித்தீவுக் கிராமத்தைச் சேர்ந்த 18 வயதுடைய அழகுதுரை அதீஸ்காந்த என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தற்போது மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் அறிந்த கொக்கட்டிச்சோலைப் பொலிசார் உடனடியாக அவ்விடம் நோக்கி விரைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை ! Rating: 4.5 Diposkan Oleh: Battinews batticaloa
 

Top