காட்டில் மரங்களை வெட்டிய கும்பல் தப்பியோட்டம் மாட்டுவண்டிகள் மரங்கள் மாடுகள் மீட்பு


-சரவணன் ;--

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள தொப்பிக்கலை ஈரக்குலம் காட்டுப் பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல் குழு ஒன்று மாட்டுவண்டியில் சென்று மரங்களை வெட்டிய போது பொலிசாரை கண்டு; தப்பி ஒடிய நிலையில் பொலிசார் 7 மாட்டுவண்டிகளில் இரண்டு மாடுகள் மற்றும் மரங்களை நேற்று சனிக்கிழமை மீட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.சமரக்கோன் தெரிவித்தார்

குறித்த பகுதியில் உள்ள காட்டில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டு காடழிப்பு இடம்பெறுவதாக பொலிசாருக்க கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பகுதியில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.சமரக்கோன் தலைமையிலான பொலிஸ்குழக்கள் வெள்ளிக்கிழமை இரவு காட்டுப்பகுதியில் சொதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்


அப்போது சட்டவிருhத மரக்கடத்தல் கும்பல் பொலிசாரைகண்டு வெட்ய மரங்கள் மற்றும் மாட்டுவண்டிகளையும் மாடுகளையும் கைவிட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர் இதனையடுத்து பொலிசார் கைவிடப்பட்ட 7 மாட்டுவண்டிகள் 2 மாடுகள் மற்றும் வெட்டப்பட்ட மரங்களை மீட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்

இது தொடர்பான விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கோண்டுவருகின்றனர்


இதேவேளை கடந்த வியாழக்கிழமை பல்லுமலை பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக கனரக வாகனததில் மரங்களை எடுத்துச் சென்ற ஒருவரை கைது செய்து நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.