எதிர்வரும் வாரம் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது!

வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலத்தின் இரண்டாம் கட்ட மழை வீழ்ச்சி அடுத்தவாரம் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கொழும்பு ஆங்கில ஊடகமான சண்டே ரைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, இரண்டு மாதங்களுக்கு எதிர்பார்க்கப்பட்ட இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பாதிப்பினைச் சந்தித்திருந்தது.

இடைப்பருவ காலத்தில், காற்று மெதுவாக அல்லது மாறி வீச வேண்டும். ஆனால் காற்றின் வேகம் அதிகரித்தால், மழை வீழ்ச்சி பாதிப்படையும்.

இந்நிலையில், அடுத்தவாரம் 100 மி.மீ வரையான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.