தமிழ் பேசும் மக்களுக்கு நிலையான அரசியல் தீர்வினைப் பெறவேண்டும்



இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ் பேசும் மக்களுக்கு நிலையான அரசியல் தீர்வினைப் பெறவேண்டும் என்ற நோக்கோடு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைமைகளும் கச்சிரமாக செயற்பட்டு வருகின்றது என முன்னாள் கிழக்குமாகாணசபை உறுப்பினர் த. கலையரசன் தெரிவித்தார்
சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் இவ்வருடம் சாதரணதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் விடுகை விழா 4 ஆம் திகதி திங்கட்கிழமை அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்
நாவிதன்வெளிக் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்தார்கள்.
அதே வேளை கிழக்குமாகாணசபை உறுப்பினர் த. கலையரசனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் ஓதுக்கீடுசெய்யப்பட்ட போட்டோக்கொப்பி இயந்திரத்தினை பாடசாலை சமூகத்திடம் கையளித்தமை குறிப்ப்pடத்தக்கது
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் தமிழ்த்தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு முழு அதிகாரங்களும் நிறைந்ததான ஒரு தீர்வு கிடைக்கவேண்டும் என்பதில் எமது அரசியல் தலைமைகள் முன்முரமாக செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள் இந்த நிலையில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை சம்மந்தமாக மக்கள் மத்தியில் பலகருத்துக்கள் பேசப்படுகின்றன ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது யாருக்கும் சோரம்போகவோ அல்லது எமது மக்களை அடகு வைப்பதற்கோ தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தயாரில்லை தமிழ் பேசும் மக்களுக்கான அதிகாரங்களைப் படிப்படியாக பெறவேண்டி இருக்கின்றது
இடைக்கால அறிக்கையில் மத்திய அரசில் உள்ள அதிகாரங்களில் அதிகமானவை மாகாணசபைக்கு வழங்கவேண்டும் என்ற விடயங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றது. இந்த அறிக்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
இந்நிலையில்தான் பலர் இடைக்கால அறிக்கையில் எதுவும் இல்லை என்று மக்களை குழப்பும் நிலைகளைச் செய்யமுனைகின்றனர் இதற்காகத்தான் மக்களுக்கு இடைக்கால அறிக்கை தொடர்பாக பல விளக்கங்களை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முன்வைத்து வருகின்றது
கடந்த காலங்களில் தமிழ் மக்கள் கல்வியினால் மட்டுமல்ல அபிவிருத்தியிலும் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றோம் இந்தப்பிரதேசத்தில் வைத்தியர்கள் இல்லை அன்னமலை வைத்தியசாலைக்கு வெளிப்பிரதேசத்தில் இருந்து வைத்தியர்கள் வராவிட்டால் வைத்தியர்கள் இல்லை ஏன் என்றால் இப்பகுதியில் விஞ்ஞானம் கணிதத்துறைகளில் கல்வி கற்பது குறைவு அது மாறவேண்டும் இந்தப்பகுதியில் வைத்தியர்களும் பொறியியலாளர்களும் உருவாகவேண்டும் அதற்காக நாம் அயராது உழைக்கவேண்டும்.
இதனை கூறுகின்றேன் ஏன் என்றால் நாம் கல்வியால்தான் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றோம்
தற்போது கிழக்கு மாகாணத்தில் வழங்கப்பட்டு இருக்கின்ற ஆசிரியர் நியமனத்தில் பெண்களே ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு இருக்கின்றனர் இதனைப் பார்க்கின்றபோது ஆண்கள் கல்வியல்  ஆர்வம் காட்டுவது குறைந்துபோகின்றமையினை அவதானிக்கமுடிகிறது .இந்தப் பாடசாலையினைப் பொறுத்தமட்டில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சாதாரணதரப்பரீட்சையில் சம்மாந்துறை வலயத்தில் உள்ள 71 பாடசாலையில் வேப்பையடிகலைமகள் வித்தியாலயம் முதலாம் நிலை பெற்று சாதனை படைத்துள்ளமை எமது சமூகத்திற்குப் பெருமையாக இருக்கிறது அந்தவகையில் இம் மாணவர்களை வழிப்படுத்திய அதிபர் ஆசிரியர்களைப் பாராட்டுகின்றேன் அத்தோடு இந்தப் பாடசாலையின் அதிபர் இந்தப்பிரதேசத்தில் பல கல்வியியலாளர்களை உருவாக்கியுள்ளார்  என்பதனை மறக்கமுடியாது அது மட்டுமல்ல தமிழ்த் தேசிய அரசியலுக்காகவும் பங்காற்றி பக்கபலமாக செயற்படுகின்ற ஒருவர் எனவும் தெரிவித்தார்