இலங்கையில் குறைந்த விலையில் மோட்டார் வாகனம்!

இலங்கையில் சிறிய ரக இலத்திரனியல் மோட்டார்  வாகனத்தை 5 அல்லது 6 இலட்சம் ரூபாவுக்கு வழங்க முடியும் என இறக்குமதியாளர்களின் சங்க தலைவர் சம்பத் மெரின்சிகே தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்று நேற்று  (புதன்கிழமை) வழங்கிய  பேட்டியின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


சீனாவிலிருந்து குறைந்த விலையில் இந்த வாகனத்தை இலங்கைக்கு கொண்டு வர முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முச்சக்கர வண்டிகளுக்கு மாற்றீடாக இந்த மோட்டார் காரினை பயன்படுத்த முடியும் என சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்