மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் ஆரம்பமானது க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை

(வரதன்)மட்டக்களப்பு உள்ள 5 கல்வி வலயங்களில் இன்று காலை சமய வழிபாடுகளின் பின்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் இறுக்கமான சட்டநடை முறையில் தெரிவு செய்யப்பட்ட பரீட்சை நிலையங்களில் மாணவர்கள் மிக உற்சாகமான நிலையில் ஆரம்பமானது

க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை.இதில் இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில்  க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைக்கு புதிய பாடத்திட்டத்தின் கீழ் 102 பரீட்சை நிலையங்களில் பாடசாலை பரீட்சாத்திகள் 10273 பேர் தோற்றுகின்றனர்.இதற்கு 14 இணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.


இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தனியார் பரீட்சாத்திகள் 4788 பேருக்காக பழைய பாடத்திட்டத்தின் கீழ் பரீட்சாத்திகளுக்காக பரீட்சை நிலையங்கள் 55ம்அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு 7இணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கற்குடா பட்டிருப்பு மட்டக்களப்பு மன்முணை மேற்கு மட்டக்கப்பு மத்திய வலங்களுலும் இம் முறை இப்பரீட்சை முன்னெடுக்கப் படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 15061 பேர் பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.இன்று ஆரம்பமாகிய இப் பரீட்சையின் முதல் பாடமாக சமய பாடம் இடம்பெறுகின்றது.