கிழக்கில் சிறந்த தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும்: துரைரட்ணம்

கிழக்கு மாகாணத்தில் சரியான தலைமைத்துவத்தை உருவாக்கினால்  மாத்திரமே தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கமுடியும் என ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரட்ணம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் மட்டக்களப்பில் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி போட்டியிடுவது தொடர்பாக ஊடகவியலாளர் மகாநாடு நேற்று  (வெள்ளிக்கிழமை)  மட்டக்களப்பில் உள்ள கட்சி காரியலயத்தில் இடம்பெற்றது இதில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “எதிர்வரும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் தமிழர் ஒருவரை முதலமைச்சர் ஆக்குவதற்கான செயற்பாடுகளை செய்துவருகின்றோம்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழர் பிரதேசம் எந்த இனத்திற்கும் அடிபணியாமல் இருக்குவேண்டியது மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏனைய இனங்கள் தொடர்பான சம்மந்தப்பட்ட விடயங்களில் தமிழர்களை பாதுகாப்பதற்கான செயவ்வடிவங்ளை கொடுத்துள்ளோம்.

கிழக்கு மாகாணத்திலுள்ள ஒட்டு மொத்த தமிழ் மக்களும் சேர்ந்து ஒரு சரியான தலைமைத்துவத்தை உருவாக்கினால் மட்டுமே தமிழர்களின் பிரதிநிதித்துவம் நூறுவீதம் பாதுகாக்கமுடியும்.

கிழக்கு மக்களின் கருத்தை வலுவடைய செய்வதற்கான எந்த விட்டுக் கொடுப்பையும் செய்ய தயாராக இருக்கின்றோம் ஆனால் கொள்கையை விலைபேசி விற்பதற்கோ ஒரு சிலரின் நலனை  பாதுகாக்கவோ  எந்த சந்தர்ப்பதிலும் இடமளிக்கமாட்டோம்” என்றார்.