இடமாற்றம் அனைத்தும் தேர்தல் முடிந்த பிற்பாடே அமுலுக்கு வரும் !!



(சா.நடனசபேசன்)

சம்மாந்துறை வலயக் கல்வி இடமாற்ற சபையினால் வழங்கப்பட்ட இடமாற்றம் அனைத்தும் தேர்தல் முடிந்த பிற்பாடே அமுலுக்கு வரும் என சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர்  சகுதுல்  நஜீம்அவர்கள் .தெரிவித்தார்.

சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தினால் 01.01.2018 முதல் செயற்படும் வண்ணம் வழங்கப்பட்டுள்ள இடமாற்றம் தொடர்பாக  வலயக்கல்விப் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது எமது இணைய செய்திசேவைக்கு மேற்கூறியவாறு தெரிவித்தார்.

சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் நவம்பர் மாத வலய மட்ட இடமாற்ற சபையின் தீர்மானத்திற்கமைய வழங்கப்பட்ட இடமாற்றங்கள் அதாவது 01.01.2018 இருந்து அமுலாவதற்காக வழங்கப்பட்ட இடமாற்றங்கள் அனைத்தும் இடை நிறுத்தப்பட்டு, (தேர்தல் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கமைய இடைநிறுத்தப்படும் எனவும்) , இவ்வாறு இடை நிறுத்தற்பட்ட இடமாற்றங்கள் யாவும் தேர்தல் முடிவடைந்ததன் பிற்பாடு அதாவது பெப்ரவறி மாதம்  மீண்டும் அமுல்படுத்தப்பட்டும் எனத்  தெரிவித்தார்.

மேலும் கடிதங்களைப் பெற்ற எந்த ஆசிரியர்களும் இடமாற்றம் வழங்கப்பட்ட பாடசாலைக்கு 01.01.2018 ம் திகதி செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் அவர்கள் இருக்கின்ற பாடசாலையிலே தேர்தல் முடியும் வரை கடமையாற்றவேண்டும் என அவர் தெரிவித்தார்.